Monday, January 24, 2011

கதையே கவிதையாய்...............


கதையே கவிதையாய் !

THE PROPHET - KAHLIL GIBRAN.

அல்முஸ்தபா, அனைவராலும் நேசிக்கப்பட்ட ஜீவன், நிகழ்காலத்தின் விடிவெள்ளியானவன், ஆர்பலீஸ் நகரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறான் தான் பிறந்த மண்ணிற்கே தன்னைச் சுமந்து செல்லப் போகும் கப்பலுக்காகக் காத்துக் கிடக்கிறார்.

பன்னிரண்டாம் வருடம், ஏழாவது நாள் அறுவடை சமயம், நகர எல்லையை விட்டு குன்றின் மீதேறி கடற்பரப்பை நோக்கும் போது மூடுபனியினூடே கப்பல் வருவது மங்கலாகத் தெரிந்தது.

இதயக் கதவுகள் விரிந்து திறந்து, அவருடைய இன்ப எல்லை கடல் கடந்து விரிந்தது. அவர் கண்களை மூடி ஆன்மாவின் அமைதியில் பிரார்த்தனை செய்தார்.

ஆனால் குன்றிலிருந்து கீழே இறங்கும் போது ஏதோ ஒரு சோகம் மேலே படர்ந்தது......அவர் இதயம் நினைத்தது :

நான் துன்பம் இன்றி அமைதியாக எப்படி புறப்படப் போகிறேன் ? அல்லது ஆன்மாவின் ரணமின்றி இந்நகரத்தை விட்டு எவ்வாறு வெளியேறப் போகிறேன்?

வேதனையோடு நீண்ட நாட்கள் இந்த சுவற்றுக்குள் கழித்திருக்கிறேன், நீண்ட தனிமையான இரவுகள் : சோகமின்றி அவர் தனிமையையும் வேதனையையும் யாரால் போக்க முடியும் ?

குழந்தையைத் தன் தோளின் மீது ஏந்திக் கொண்டிருந்த ஒரு பெண், குழந்தைகள் பற்றிப் பேசும்படி வேண்டினாள்.

அதற்கு அவர் கூறியதாவது :

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல.........

அவர்கள், வாழ்க்கை அது தன் சொந்த ஏக்கங்களின், மகனும், மகளும் ஆவார்கள்.

அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களே ஒழிய உங்களிலிருந்து வரவில்லை.

அவர்கள் உங்களோடு இருந்தாலும் உங்கள் உடமைகள் அல்ல.

நீங்கள் உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுக்கலாம். ஆனால் உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணிக்க முடியாது.

காரணம் அவர்கள் தங்களுடைய சொந்த எண்ணங்கள் கொண்டவர்கள்

நீங்கள் அவர்களின் உடலை மட்டும்தான் உடமையாக்கிக் கொள்ள இயலுமே ஒழிய அவர்களின் ஆன்மாவையல்ல.

காரணம், அவர்களின் ஆன்மா எதிர்காலம் எனும் இல்லத்தில் குடியிருக்கிறது. உங்கள் கனவிலும் அதனை நீங்கள் நெருங்க முடியாது.

நீங்கள் அவர்களைப் போலவே இருக்க முயற்சிக்கலாம். ஆனால் உங்களைப்போலவே அசலாக அவர்களை உருவாக்க முடியாது.

காரணம் வாழ்க்கை பின்னோக்கிச் செல்லுவதும் இல்லை, இறந்த காலத்தில் நிலைத்து நிற்பதும் இல்லை.

உங்கள் குழந்தைகள் விர்ரென்று விடுகின்ற அம்பிற்குரிய நாணாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

அந்த வில்லாளி தொலை நோக்குப் பாதையின் மீதல்லவோ குறிவைத்திருக்கிறான்.

அவன் தன் பலம் கொண்டு, தான் விடும் அம்பு வெகு தூரம் வேகமாக பாய்வதற்கு ஏற்றபடி உங்களை வளைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வில்லாளியின் கையில், உங்கள் வளையும் தன்மை மகிழ்ச்சிக்குரியதாக இருக்கட்டும்.

அவன் பறக்கக்கூடிய அம்பையே விரும்புவதால், அதற்காக உறுதியாக நிற்கக் கூடிய அந்த நாணையும் அவன் விரும்புகிறான்.

“ அண்ணன் என்னடா.......தம்பி என்னடா அவசரமான உலகத்திலே.............”

”தாய் என்றாலும், பிள்ளை என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவோ....?”


--------------------------------------------------------------------

கண்ணீரும் சிரிப்பும் !

நைல் நதிக்கரையில், சலனமில்லாத நீரோட்டத்தில், ஒரு கழுதைப்புலியும், முதலையும் சந்தித்துக் கொண்டது. இரண்டும் ஒன்றை ஒன்று நலம் விசாரித்தது.

கழுதைப்புலி முதலையைப் பார்த்து, “ தங்களின் நேரம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது ஐயா ?” என்றது.

பதிலாக அந்த முதலையும், “ மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நான் வேதனையாலும், வலியாலும் துடிக்கிறேன். ஆனால் மற்ற உயிரினங்களோ எப்பொழுதும், அதற்கென்ன நல்லாத்தான் முதலைக் கண்ணீர் வடிக்கிறது, என்கின்றன. இது மேலும் என்னை வேதனைப்படுத்துகிறது “, என்றது.

கழுதைப் புலியோ, “ நீ, உன் வலியும், வேதனையும் பற்றிப் பேசுகிறாய். ஆனால் என் நிலையைப் பற்றி எண்ணிப்பார். இந்தப் பிரபஞ்ச அழகையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்டு வியந்து போகிறேன். மகிழ்ச்சியின் எல்லையில் பளபளப்பான பகல் பொழுதைப் போல நானும் சிரிக்கிறேன். அதற்கும் இந்த காட்டுவாசிகள், இது கழுதைப் புலியின் சிரிப்பு என்றுதானே எகத்தாளமாகக் கூறுகிறார்கள்?”, என்றது.

சிரித்தாலும், அழுதாலும் சரியான புரிதல் இல்லையென்றால் வாழ்க்கையே நரகம்தானே..........


13 comments:

  1. சிரித்தாலும், அழுதாலும் சரியான புரிதல் இல்லையென்றால் வாழ்க்கையே நரகம்தானே..........


    .....என்ன அருமையாக வாழ்க்கை தத்துவங்களை சொல்லி இருக்காங்க.... அருமையான பகிர்வுங்க...

    ReplyDelete
  2. நித்திலம்...இரண்டு கதைகளுமே வாழ்வின் பாடம் சொல்கிறது !

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு மேடம்.

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. நன்றி ஹேமா. தங்களின் புரிதலே கவிதைதான்.

    ReplyDelete
  6. நன்றிங்க நண்டு நொரண்டு.

    ReplyDelete
  7. நன்றிம்மா வித்யா, ஆசியா ஒமர்.

    ReplyDelete
  8. //வாழ்க்கை பின்னோக்கிச் செல்லுவதும் இல்லை, இறந்த காலத்தில் நிலைத்து நிற்பதும் இல்லை.//


    அருமை அருமை....

    ReplyDelete
  9. மிக நல்ல பகிர்வு.மிக்க நன்றி.

    ReplyDelete