Sunday, October 13, 2013

சரசவாணியே! சகலகலாவல்லியே!


பவள சங்கரி

சரசவாணியே! சகலகலாவல்லியே!



வீணையேந்திய சகலகலா வாணியே
வேதங்களின் விழுப்பொருள் நாயகியே
வெண்டாமரையிலுறையும் அன்னையே
வேண்டுவதெல்லாம் அறிவோய் நீயே!

நூல்வடிவாய் நின்ற நாயகியே
பால்வடியும் கவிமாலையானவளே
கல்மனமும் கனிந்துருகும் காதலாலே
சொல்வனமாய் திகழும் உன்னருளாலே!

கூத்தனூருறை கோமேதகமே
ஆத்மஞானமருளும் அருந்தவமே
பத்மாசனத்தில் மகிமைபுரியும் மாதவமே
ஆத்மதத்துவமாயொளிரும் அருளமுதமே

ஓட்டக்கூத்தனை வரகவியாக்கிய மலைமகளே
எட்டநின்று எனைசோதிக்கும் கலைமகளே
பட்டதெல்லாம் போதுமினி பார்மகளே
நட்டமொன்றுமில்லை வருவாய் வான்மகளே

சக்திவடிவான நாயகியே சரசுவதிஅன்னையே
உன்னையே எண்ணியே நித்தமும் வாழுவேனே
எங்கெலாம் தேடுவேன் அன்னையே நின்னையே
என்னுள்இடர் வாராமல் காத்தருள் கற்பகத்தாயே!

அமைதியின் உருவாய் அம்பாள்புரி உறைபவளே
ஆதிசங்கரனுக்கருளிய சரசவாணியே! அமிர்தகலசமே
மென்னிதழும் அட்சரமாலையும் அணிந்தவளே! அற்புதமே!
கவிவல்லோரை கற்றுணரச்செய்த கலைவாணியே! காத்தருளே!



3 comments:

  1. அருமை...

    இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. படமும் பாடலும் மிகவும் அழகாக, மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    இனிய சரஸ்வதி பூஜை + விஜயதஸமி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

  3. இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete