ஆனந்தக் கூத்து!


பவள சங்கரிஅண்டமெனும் ஆலயமதில் ஆனந்தக்கூத்தாடுகிறான்
பிண்டமாய்ப்போகும் ஊனுடம்பும் ஆலயம்தான்
அண்டமும் பிண்டமும் ஆனந்தத்தின் ஆணிவேர்
கொண்டதும் கொடுத்ததும் ஞானக்கூத்துவனின் இச்சை

இடகலை பிங்கலை சுழிமுனைகளின் இம்சையால்
மடமாந்தர் படும்துயர் பரமனவன் பார்வையால்
நடனமாடும் நாதமாய் நசுக்கிய முயலகனாய்
படமெடுத்து ஆடும் பாவவினைகள் பற்றறுத்துப்போகுமே!

தோன்றாக்கிடக்கும் அனைத்தும் தோன்றிச்சுடர்வீசவே
அசைவுகளனைத்தையும் எழுப்பும் அக்கரசக்கரமாகவே
ஓங்காரமாய் டமடமவென உடுக்கையாய் ஒலிக்கவே
ஆங்காரமும் ஆணவமும் படிப்படியாய் அழியவே!

அகத்தே அச்சமதை விரட்டி ஆன்மாவை ஒளியூட்டி
அங்குசமாய் மதத்தையழிக்கும் மாயையாய் வழிகாட்டி
அநித்தியத்தை உணரச்செய்து நித்தியமாய் நிறைந்திருக்க
அம்மையின் நீலவொளியில் ஆன்மாக்கள் ஞானயின்பம் துய்க்குமே!


படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://1.bp.blogspot.com/-vz9jpk-qLMM/T6FSlULm2xI/AAAAAAAAGSk/FjadGczxf-A/s1600/lord-nataraja-dancing-form-shiva.jpg&imgrefurl=http://www.hindudevotionalblog.com/2012/05/lord-nataraja-dancing-form-of-shiva.html&h=1333&w=977&sz=93&tbnid=hjA7ynq7zKYK5M:&tbnh=145&tbnw=106&zoom=1&usg=__JrhQ06dXldxIERorCTp-q21VUWI=&docid=DifaN9KEuG2_-M&sa=X&ei=4AthUtnZKIyIrAfpmoG4Bg&ved=0CEIQ9QEwCg

Comments

  1. சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

Post a Comment