Wednesday, October 16, 2013

சுயம் எங்கே?


பவள சங்கரி



 சங்கீதம் தெய்வத்தின் சன்னதி
தேவகானம்.

மயிலின் நடனம் மாதவம்
மகோன்னதம்.

கிளியின் மொழி கிளர்ச்சி
பேரின்பம்.

காற்றின் குளுமை சுகம்
சுதந்திரம்



காதலின் மொழி வேதம்
தெய்வீகராகம்.

கதிரவனின் தகதகக்கும் பட்டொளி
பிறவிப்பயன்.

புள்ளினங்களின் கீச்சொலி
புவியின்நேசம்.

வனங்களின் பசுந்தளிர்கள்
மானிடரின்சுவாசம்.

வனவிலங்குகளின் அதிபயங்கர ஓலம்
இயற்கையின்விநோதம்.

தேவாலயங்களின்  பிரம்மாண்ட கூடாரம்
மனிதாலயங்களின்பேரச்சம்.

கவியின் மொழி தேவாமிர்தம்
வாணியிட்டபிச்சை.

உழைப்பின் உயிர்நீர் உன்னதம்
வளமையின்சின்னம்.

களைப்பின் கனிரசம் கற்கண்டு
தேவியின்படையல்.

அமைதியும் ஆழ்நிலையும் ஆனந்தமும்
ஆண்டவன்கூற்று.

இயற்கையும் இதிகாசமும் இசையாட்சியும்
இறையாட்சியின்நீட்சி.

வரமும் சாபமும் வறட்சியின் சோகமும்
வட்டியில்லாக்கடன்.

கடன் மட்டுமல்ல கருத்துக்களவும்
அன்பைமுறிக்கும்.

படைத்தவனின் பார்வையின் மீட்சி
பசித்தவனின்நிறைவு.

தோற்றப்பிழையும் காட்சிப்பிழையும்
தோல்வியின்முகங்கள்.

ஆத்மாவின் கீதம் பாலினமற்ற
உயிரின்வேதம்.

உயிரின் நேயம் மானுடத்தின்
மாசற்றவரம்.

அன்பு அன்பு அன்பெனும் பதம்
அகம்மலரும்அற்புதம்.

கனிவெனும் களஞ்சியம் காதலின்
கதகதப்பு.

சர்வமும் சிவார்ப்பனம் என்றால்
சங்கடமுமில்லை.

அனைத்தும் நானே நானே எனும்போது
அமைதியுமில்லை.

உதயத்தின் உய்வை உரசிப்பார்க்கும்
உரிமையுமில்லை.

அடிமைச் சிறையில் அகப்பட்டாருக்கு 
சுமைதான்தொல்லை.

கார்க்காலமும் கோடைக்காலமும் நிரந்தரமில்லை
வாழ்ச்சியும் வீழ்ச்சியும் நம்கையில்.

அகரம் சிகரமாவதும் தகரம் தங்கமாவதும்
அசையாநம்பிக்கையில்.

மனநிம்மதி பிறப்பிடத்தின் மந்திரம்
மகத்தானசேவை.

நண்பரை உருவாக்கும் தாய்மை
நட்பினிலக்கணம்.

தாய்மை களங்கமற்ற கருணையின்
தாத்பரியம்.

உடைந்த இதயத்தை செதுக்கும் உளி
உன்னதமானநட்பு.

சிற்றுளியால் சிதைக்கப்படும் கல்தான்
சிவலிங்கமாகிறது!!!

கல்லோ கற்சிலையோ கடவுளோ பார்வைதான்
பரிசளிக்கிறது.

பார்வை வளமானால் காட்சியும்
இனிதாகும்!


படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://rudrakshayoga.files.wordpress.com/2013/03/devi_trinity.jpg&imgrefurl=http://rudrakshayoga.wordpress.com/2013/03/19/vagarthaviva-a-magical-verse-from-poet-kalidasa-one-prayer-25-meanings-part-2/&h=1208&w=1095&sz=266&tbnid=yfhoE3bSpEhycM:&tbnh=132&tbnw=120&zoom=1&usg=__Po2huXPBVKkEpoD9R1RcpkEb1mo=&docid=yMgm8-os373aqM&sa=X&ei=XbJeUsGZLImQrge4jIGgBQ&ved=0CDUQ9QEwBA

2 comments:

  1. சுயம் எங்கே ? தலைப்பும் ஒவ்வொரு வரிகளும் எவ்வளவோ சொல்கின்றன. யோசிக்க வைக்கும் அருமையான ஆக்கம்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை... முக்கியமாக :

    // அன்பு அன்பு அன்பெனும் பதம்
    அகம்மலரும்அற்புதம்...

    அகரம் சிகரமாவதும் தகரம் தங்கமாவதும்
    அசையாநம்பிக்கையில்... //

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete