Monday, October 14, 2013

ஓம் ஆதிபராசக்தி அன்னையே போற்றி!


பவள சங்கரி



கோலமயிலென தோகைவிரித்தாடினாள்
கோதைநாயகி!

புள்ளிமானென துள்ளியாடினாள்
புவியரசி!

அன்னநடையுடன் அகம்குளிர்ந்தாள்
அங்கையற்கண்ணி!

சிம்மத்தை சிம்மாசனமாக்கினாள்
சிம்மவாகினி!

குயிலோசையில் குழைந்துபோனாள்
குமரிக்கன்னி!

தத்துங்கடலோசையில் ஆர்ப்பரித்துநிற்கிறாள்
தத்துவநாயகி!

தகதகவெனத்தகிக்கும் கதிரொளியானாள்
திரிபுரசுந்தரி!

ஓம்எனும் அகர உகர மகர நிலையானவள்
ஓம்காரநாயகி!

மாணிக்கவீணையேந்தி மாதவம்புரிபவள்
மாணிக்கநாச்சி!

கரும்புவில்லேந்தி கடைக்கண்காட்டியவள்
கண்ணபுரநாயகி!

கமலநயனவடிவாய் காமரூபமானவள்
கமலபாரதி!

சுவர்ணரூபமாய் சொக்கிநிற்கிறாள்
சுவர்ணமால்யாயிணி!

சரணம் சரணம் சரணம் 
உன்திருப்பாதம் சரணம்!

2 comments:

  1. கோலமயிலென தோகைவிரித்தாடினாள்
    கோதைநாயகி! மனதில் கோலம் கொண்டாள் அருமையாக ..

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. அம்பாளைப்போற்றி எழுதியுள்ள அனைத்து வரிகளும் அழகோ அழகு !

    சரணம் சரணம் சரணம்
    உன்திருப்பாதம் சரணம்!

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete