ஒற்றையடிப் பாதை!


                                          படம் உபயம் : அந்தியூரன் பழமைபேசி

ஒற்றையடிப் பாதை
கழிவில்லாத தூய்மை
தெளிவான நேர்க்கோடு
கண்முன்னே சேருமிடம்

கோடை மழையும்
அடைகாக்கும் நேயமும்
அலட்டும் இடியோசையும்
அதிராத தெளிவான பாதை

சிறகொடித்த குயிலின் 
வனம் காக்கும் ஓசை
ஊனமான உளியின்
செப்பனிடும் மனித(ஓ)சை

பசும்புல்வெளி அணைத்த
சீர்மிகுவெளி சீரற்றதேடல்
சினமற்ற சீரானபயணம்
ஊனமற்ற உள்ளம்

பாதை தெளிவானால்
பயணம் இனிதாகுது
பாரம் நீக்கமாகுது
பணிகள் இனிதாகுது!!!

Comments

  1. பாதை தெளிவானால் அனைத்தும் நலம்...

    படமும் அருமை...

    ReplyDelete

Post a Comment