எண்ணமதில் தோன்றுதொரு காட்சி - வண்ணக்
கோலங்களில் நல்லோரின் ஆட்சி!
வீடுதோறும் மங்கல முழக்கம்
வீதிதோறும் நவீனமயமான பள்ளி
கேடுதீரும் பெற்றோரும் துள்ளி
நாடு முற்றிலும் நல்லுழைப்பாளிகள்
விஞ்சுமெழில் நலமுடன் வந்துதித்தே
கொஞ்சுமொழி சிறாருடன் கூடிக்களித்தே
கேடின்றி வாழ வழியமைப்போர் நாடியே
கேண்மை கொண்டே ஏற்பீர் அவராட்சியே!
மேன்மை கொண்டே ஒளிருமேயவர் மாட்சியே!
தங்குமின்பம் என்றும் தகைமையின் நீட்சியே!
தரணிபோற்றும் பாரதத் தாயவள் காட்சியே!
வீடுதோறும் வாக்குகள் சேகரித்தீர்
வீதிதோறும் வேட்பாளர் அணிவகுத்தீர்
நகரெங்கும் வாக்குறுதிகள் வீசிச்சென்றீர்
நாடு முற்றிலும் நயந்துரைத்தீர்
தேடுதல் வேண்டியிங்கும் வாக்காளர்
வாடுதல் காண்பீர் நன்னெஞ்சே
கேடுதீர்க்கும் சொல்லின் சுடரேற்றி
வாடுமனத்தின் வயிற்றுத்தீத் தணியத்
தாமுணர்ந்து இரங்கி யிருப்போரை
நாமுணர்ந்து வரவேற்கும் தருணமிது!
No comments:
Post a Comment