Monday, August 22, 2016

முத்தானகவி



ஆனந்தயாழை மீட்டி ஆயிரமாயிரம் 
இதயங்களை கனிவூட்டிய கவிஞன்
தரணியெலாம் தவிக்குமாறு தன்னுயிரிழந்து
தாம்பெற்ற செல்வங்களை தத்தளிக்கவிட்டு
மனையாளையும் மீளாத்துயரில் தவிக்கவிட்டு
எளிமையாய் வாழ்ந்து எளிதாய் மாய்ந்து
மானுடத்தின் அழியாச்சுடராய் ஒளிர்ந்து 
மாதவ வேள்வியின் ஆகுதியாய்
காலத்தேவன் ஆரத்தழுவலில் பிஞ்சு
மழலையையும் மறந்து  மேலுலகம்
மேவிய முத்தானகவிக்கு கண்ணீரஞ்சலிகள் :-(

பவளா

No comments:

Post a Comment