பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லையென்றும் தொல்லை!பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லையென்றும் தொல்லை!


பின்னியவலையும் சிந்தியநஞ்சும் எறிந்தவஞ்சகமும்
ஏதுமறியா மழலையுள்ளம் பழிவாங்கும் பாதையறியாது
பசித்தவயிற்றுக்கு பால்சோறு படுத்துறங்க அன்னைமடி
கூடிக்களிக்க தந்தைமார் வித்தைக்காட்ட வீதிநாய்
விண்ணில்பறக்க வீசுதென்றல் ஓடிவிளையாட உடனொருநிலவு!


பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லையென்றும் தொல்லை!

கள்ளமறியா களிப்பில் எனதுனது என்றில்லா நினைப்பில்
உள்ளமறிய நகைப்பில்  உள்ளதெலாம் உனக்கென்றளிப்பில்
தருமத்திலுறை கர்ணனாய் கருணையிலுறை கடவுளாய்
நிழலும்நிசமும் ஓருருவாய் இன்பமும்துன்பமும் ஓர்நிலையாய்
கனவும்நினைவும் ஒன்றாய் கருப்பும்வெளுப்பும் நன்றாய்
பேதமும் வாதமும் பகையும் பாதகமும் எதுவுமின்றி
நித்தமும் தாமும் களிப்புற்று மற்றோரும் களிப்புறவே

பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லையென்றும் தொல்லையே!

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'