கொரோனா கொடுமை 7கொரோனா தொற்று உயிர் காக்கும் மருத்துவமனைகளின் மனிதாபிமானத்தையுமா கொன்று போட்டுவிடும்? சில நாட்கள் முன்பு ஈரோட்டின் ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் இந்தக் கொடுமை நடந்துள்ளது. மேட்டூரைச் சேர்ந்த ஒரு எலக்ட்ரீசியனின் 7 வயது மகனுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில்தான் அந்தக் குழந்தைக்கு இதே பிரச்சனைக்காக மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அந்தச் சிறுவனுக்கு நேற்று திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட அதே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மருத்துவம் பார்க்க முடியாது என்று திருப்பியனுப்பியிருக்கிறார்கள். பெற்றோர் எவ்வளவோ மன்றாடியும், கெஞ்சியும் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டனர். பின்னர் அச்சிறுவனை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றபோது, வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது. என்ன கொடுமை இது ... இந்த அவசரமான பேரிடர் காலத்தில் அரசாங்கம் இதற்கெல்லாம்கூட பொறுப்பேற்க முடியுமா .. இவர்களெல்லாம் எதற்கு மருத்துவமனை நடத்துகிறார்கள்? சுயநலப் பேய்கள் ... திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'