Saturday, September 22, 2012

பாவலர்கள் - கலீல் ஜிப்ரான்



பாவலர்கள்

நான்கு பாவாணர்கள் மேசையின் மீது இருந்த திராட்சைரச மதுக் கோப்பையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். முதல் கவிஞன், ”எம் மூன்றாம் கண் மூலமாக, ஒரு மாய வனத்தின் பறவைகள் மேகங்களாய் விண்வெளியில் நகருவது போல் இந்த மதுவின் சுகந்த மணத்தையும் காண்பதாக என்ணுகிறேன் யான்என்றார்.
  இரண்டாம் பாவலரோ தம் சிரத்தை உயர்த்திக் கொண்டு, “எம்முடைய அகச்செவியின் மூலம் அந்த மூடுபனிப் புள்ளினங்கள் பாடுவதைக் கேட்கிறேன். மேலும் வெண்மையான ரோசா தன் மென்மையான இதழ்களுக்குள் தேனீயை சிறைப்பிடித்து வைத்திருப்பதைப் போன்று அந்த மெல்லிசை எம் இருதயத்தைக் கட்டி வைத்துள்ளதுஎன்றார்.

ஆகாயத்தாமரை!





ஊதுவத்தியும், பன்னீரும், வாசனைத் திரவமும், மலர்ச்செண்டுகளின் மணமும் கலந்ததொரு வித்தியாசமான வாடை.. ஆங்காங்கே பெண்கள் கூடிக்கூடி குசுகுசுவென இரகசியமும், வாயின் மீது அடித்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும், வயிற்றில் புளியைக் கரைக்கும் சூழல். பெரிய பட்டாசாலை முழுதும் நிறைந்த உறவுகளும், நட்புகளும், மங்கலான முகங்களுடன்......

"ஏண்டி பாவி, இப்படி அல்பாயுசுல போயிட்டியேடி.. நன்னாத்தானே இருக்கேன்னு நினைச்சுண்டிருந்தேனே.. இப்படி தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடி.. தற்கொலை பண்ணிண்டு உயிரை மாய்ச்சுக்கற அளவுக்கு நோக்கு என்னடி பிரச்சனை. என்னண்ட ஒரு வார்த்தை சொல்லப்படாதோ பாவி....

Sunday, September 16, 2012

பண்டிதரும் கவிஞரும்


அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண இயலாதேஎன்றது.
அதற்கு வானம்பாடி, “ஆம், தாங்கள் அளவிற்கதிகமாக அறிந்துள்ளீர்கள், அனைத்து அறிவார்ந்த பொருட்களையும்விட உம்முடைய கலை மேலும் அறிவுடையதாகவும் இருக்கலாம். - உம்மால் பறக்க இயலாது என்பது பரிதாபத்திற்குரியதுஎன்று பதிலிறுத்தது.
மேலும் இதெல்லாம் ஏதும் செவியில் விழாதது போல, அந்த அரவம், “உம்மால் ஆழமான இரகசியங்களைக் காணவும் இயலாது, மறைந்த ராச்சியங்களின் பொக்கிசங்களினூடே ஊர்ந்து செல்லவும் இயலாது. ஆனால் நேற்று, யான் மாணிக்கக் குகையினுள் இருந்தேன். அது செம்மையாக பழுத்த மாதுளையின் இருதயம் போன்று இருந்தது, மற்றும் மெல்லிய ஒளிக்கிரணம் அதனை தீச்சுவாலை ரோசாவாக ஒளிரச் செய்கிறது. எம்மைத் தவிர எவரால் இது போன்ற அற்புதங்களையெல்லாம் கண்டு களிக்க இயலும்?” என்றது.

Tuesday, September 11, 2012

கருணையினால் அல்ல.....!


பவள சங்கரி


ஐயா.. நன்றிங்க. சாமியாட்டமா வந்து எம்பட குழந்தையை காப்பாத்திப்போட்டீங்கோ... எங்க குலசாமியே நீங்கதானுங்கோ. புருசனும் இல்லாம என்னோட வாழ்க்கைக்கே ஆதாரமா இருக்குற இந்த ஒத்தைப் புள்ளையையும் நோய் கொண்டுபோயிடுமோன்னு உசிரை கையில புடிச்சிக்கிட்டிருந்தேங்க.. மவராசன் ஒத்த காசு கூட வாங்காம எம் புள்ளைய காப்பாத்திப்போட்டீங்க.. உங்க குலமே நல்லா வாழோணும்.. அந்த ஆத்தா மகமாயி உங்க குடும்பத்தையே காப்பாத்துவா
அம்மா.. அம்மா.. எழுந்திருங்க . இப்படி காலில் எல்லாம் விழாதீங்க. பையனுக்கு மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா கொடுங்க. இன்னும் 2 மாதமாவது ரொம்ப ஜாக்கிரதையா ரெஸ்ட்டுல வச்சிருங்க. மேஜர் ஹார்ட் ஆபரேஷன் இது.
சரிங்க ஐயா. ரொம்ப சந்தோசமுங்க. வாரேனுங்க.
சரி, 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து காட்டிட்டுப் போங்க

கதையே கவிதையாய்!


பவள சஙகரி
செவிடாக இருந்தவள்
ஒரு செல்வந்தன் முழுச்செவிடான தம் இளம் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்.
ஓர் காலைப் பொழுதினில் தங்கள் விரதம் முறிக்கும் நேரமதின் போதான (உணவருந்தும் பொழுது) உரையாடலில் நேற்று நான் சந்தைக்குச் சென்றிருந்தபோது அங்கு, டெமாஸ்கஸ் நகரிலிருந்து வந்த பட்டாடைகளும், இந்தியாவிலிருந்து வந்த மேலாடைகளும், பெருசியாவிலிருந்து வந்த கழுத்து மாலைகளும் யாமனிலிருந்து வந்த கைவளைகள போன்றவைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. திருத்தலப் பயணக் குழுவினர் .இப்பொருட்களை நம் நகரத்திற்கு இப்போதுதான் கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இங்கே பார் இது எத்துனை கந்தல் துணிகளாக இருக்கிறதென்று. ஆயினும் ஒரு செல்வந்தரின் மனைவியான நான், அந்த அழகியப் பொருட்களில் சிலவற்றையேனும் வாங்க வேண்டும்என்றாள்.
காலைக் காப்பியின் சுவையை இதமாக அனுபவித்துக் கொண்டிருந்தவன், என் அன்பே, நீ விரும்பும் அனைத்துப் பொருட்களையும், நீயே சென்று வாங்கிக் கொள்வதைத் தடை செய்வதற்கான எந்தக் காரணமும் இல்லைஎன்றான்.

Sunday, September 9, 2012

மொறு மொறு கிரில்ட் உருளை விரல் கறி


பவள சங்கரி

கிழங்கு வகைகளைப் பார்த்து அச்சமா? தேவையில்லை நண்பர்களே.. வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் அதிகமில்லாமல் செய்து சாப்பிடலாம். கிரில் அடுப்பில் 2 ஸ்பூண் எண்ணெய் மட்டுமே வைத்து செய்த மொறு மொறு உருளைப் பொரியலைப் பாருங்கள்! உருளைக் கிழங்கை தோல் சீவி விரல் நீளத்திற்கு ஓரளவிற்கு சன்னமாக வெட்டிக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக கழுவிவிட்டு உப்பு கலந்த நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின்பு இரண்டு சிறு கரண்டி எண்ணெய் விட்டு பிரட்டி, அதை கிரில் அடுப்பில் வைத்து பொறிக்கவும். அதிகப்படியான எண்ணெயையை வெளியே துப்பிவிடும். அதை எடுத்து மிளகுத், உப்புத் தூளும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.


Thursday, September 6, 2012

ஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்!





கேப்டன் லட்சுமி சேகல் (1914 - 2012



கேப்டன் லட்சுமி சேகல் சென்னையில் பிறந்து, மருத்துவராகப் பணியாற்றியவர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். 1914ம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 24ம் நாள் சென்னையில் (அன்றைய மதராஸ் பட்டிணம்) பிறந்தவர், இவருடைய தந்தை டாக்டர் எஸ். சுவாமிநாதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், அமெரிக்காவில் வானியல் துறையில் முனைவர் பட்டமும், கணிதவியலில் பட்டமும் பெற்றவர். சிறந்த குற்றவியல் வழக்கறிஞர் என்ற தகுதியும் பெற்றவர். தாய் ஏ.வி.அம்முகுட்டி, ஒரு சமூக சேவகி. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராகவும், மிகுந்த சமுதாய நலம் மிக்கவராகவும், சுதந்திரப் போராட்டத்தில் செயல் வீராங்கனையாகவும் இருந்தவர். கேரள மாநிலத்தின் பாலக்காடு நகரின்,  பிரபலமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலட்சுமி சேகல் லேடி லிவிங்ஸ்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் பள்ளியில் தம் பள்ளிக் கல்வியைப் பயின்றார். 1930ல் இராணிமேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். 1938ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முடித்து, பின்பு பெண்ணியல் மற்றும் மகப்பேறு மருத்துவ பட்டச்சான்றிதழ் (diploma) பயின்றார். மருத்துவக் கல்வியுடன், அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலும், அகில இந்திய பெண்கள் மகாநாட்டிலும் பங்கு கொண்டிருந்தார். ஆனால் லஷ்மியோ, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் அதிரடி அரசியலில் ஈர்க்கப்பட்டார்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...