Saturday, October 12, 2013

மயான சயனியே! மாசாணியே போற்றி! போற்றி!


பவள சங்கரி



மலரென உதித்து மலையென உயர்ந்து தீயெனக் கொதித்து
மதியெலாம் நிறைந்து மயானத்தில் உறைந்து மாசில்லாத
மயான சயனியாய் மாசாணியாய் உப்பாற்றங்கரையில்
மங்கலநாயகியாய் மகிழ்ந்தருளும் மகிசாசுரமர்த்தனியே! போற்றி!

வான்நோக்கிய கரமிரண்டும் மலர்மஞ்சளுடன் மங்கலமாய்
மண்நோக்கிய கரமிரண்டும் சூலமும் முரசும் அரவமுடன் 
மண்டையோடும் தாங்கி தவிப்போருக்கு அபயம் அளிக்கும் 
வற்றாத சீவநதியாய் வரமளிக்கும் வடிவுடை நாயகியே போற்றி!

Friday, October 11, 2013

வெற்றிவாணியே! ஓம் அன்னையே! லலிதாம்பிகையே!


பவள சங்கரி



வெற்றிவாணியே! ஓம்அன்னையே!  லலிதாம்பிகையே!

புவனமெங்கும் ஓயாது ஒலிக்குமோர் வேதமாம்
கவனமெல்லாம் நிறைந்து கானமாய் இசைக்குமாம்
சலனமெல்லாம் நீங்கிடவே சர்வமாய் ஒலிக்குமாம்
லலிதா சகசுரநாமமாய் பாரெல்லாம் பரவிடுமாமே!

யாதுமாகி எங்கும் நிறைந்தவளே லலிதாம்பிகையே
அனைத்துலகையும் ஆளும் அகிலாண்ட நாயகியே
ஸ்ரீபுரம் மேவிய ஸ்ரீலலிதாம்பிகையே உமையே
திருமேயச்சூர் வாழ்நாயகியே மின்னுமேகலையே!

Thursday, October 10, 2013

கன்னித்தாயே! பகவதி அன்னையே! போற்றி போற்றி!



பவள சங்கரி


கன்னித்தாயே! பகவதி அன்னையே! போற்றி போற்றி!




சிற்றாடை கட்டியவளே சிந்தையெலாம் நிறைந்தவளே
சீர்வளர்கன்னி சிவநேயச்செல்வியே தவக்கோலம்கொண்டவளே
சுசீந்திரநாயகன்  தாணுமாலயனின் திருக்காதல் நாயகியே
சுந்தரக்கன்னியே குமரித்தாய் அன்னையே போற்றி போற்றி!

விண்ணோருக்கும் முனிவோருக்கும் பூவுலக மாந்தருக்கும்
பாதகம் புரிந்த பாணாசுரனை அசுரனை ஆவேசங்கொண்டு
அழிக்க கன்னியாய் அவதரித்தவளே கன்னியாகுமரி அன்னையே!
வாடாவிளக்கே வடிவுடைநாயகியே  அனுதினமும் துதிப்போம் உன்னையே!

Monday, October 7, 2013

அருள்நிறை அன்னபூரணியே!


பவள சங்கரி




கண்ணின் கருமணியே காமாட்சியே
விண்ணின் பருப்பொருளே காமாட்சியே
தண்ணளியும் தானேவந்துதிக்கும் காமாட்சியே
எண்ணமெலாம் நிறைந்திருப்பவளே காமாட்சியே!

தேடியுனை ஓடித்திரிந்து களைத்து

நாடியுனை நானடைந்தக்கால் 
பாடிப்பரவசமாய் சிலிர்த்தேன்
கூடிக்களித்திருக்க முளைத்தேன் முத்துமணியே!

ஆத்துமந்தன்னை அருவமாயிருந்து காப்பவளே அன்னபூரணியே

கூத்துவந்தன்னை அஞ்சற்கவென அபயமளிப்பவளே அன்னபூரணியே
காத்துவந்தென்னை கருவறையில் தஞ்சமளிப்பவளே அன்னபூரணியே
அட்சயப் பாத்திரமென அருளெலாம் அள்ளித்தருபவளே அன்னபூரணியே

படத்திற்கு நன்றி:

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1541&Cat=3

Sunday, October 6, 2013

வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!


பவள சங்கரி



வற்றாத வரமருளும் நாயகியே வாரணாம்பிகையே
பொற்கோவிலில் ஆருத்ரா கபாலீசுவரனுடமர் வாரணாம்பிகையே
வற்றாத காவிரியின் வரமானவளே வாரணாம்பிகையே
பொற்பாதம் போற்றுகின்றேன் வாராணாம்பிகையே!

Saturday, October 5, 2013

தாயே! தவமே!


பவள சங்கரி




தாயே! தவமே! தத்துவஞான ஒளியே!
மாயே மதிவதனி வாருமம்மா
சேயே யானுனைத் தழுவிடவே
காமதேனுவாய் கற்பகத்தருவாய் வாருமம்மா!

கொல்லன் உலையெனக் கொதிக்குமென் மனமே
நில்லெனக் கருணைகூர்ந்து வரமொன்றருள்வாயே
கல்லென்ற இதயம்கொண்டு எனைக் காணாமல்
கொல்லெந்தன் பாவம்யாவும்  பரிபாலியே!

ஊற்றைச் சடலமிதை உய்யும் வழியறியா உயிரிதை
தையல்நல்லாள் தள்ளிநின்றே பார்ப்பதென்னே
பைம்பொழில் மாதரசே பரிதவிக்கும் ஏழையெனை
கடைக்கண்ணால் பார்த்தருளுமம்மா!

Thursday, October 3, 2013

வளம் தரும் நாயகியே! வருகவே!


பவள சங்கரி
Goddess_Adi_Parashakthi_at_Parashakthi_Temple
பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
நற்கதியருளி ஆனந்தமழை பொழியவே
பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!
நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா
அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா
ரஞ்சனியே தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...