Wednesday, February 5, 2014

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்!


அன்பு நண்பர்களே,

இந்த நூலை வெளியிட்டுள்ள பழனியப்பா பதிப்பகத்தாருக்கு மனமார்ந்த நன்றி.

​​ 
Displaying img015.jpg
  Displaying img016.jpg
​​
​​
                
என்னுரை

இந்த வாழ்க்கையில் நாம் அறிந்திராத ஏதேதோ இருக்கிறது. தேடுதலும் இருந்துகொண்டேதான் இருக்கிறது . அனைத்திலும் முதன்மையாக இருப்பதுஅன்புஎன்பதாகவே இருக்கிறது. இந்த நவீன அவசர உலகத்தில் அந்த அன்பை வெளிப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோகூட நேரமில்லாமல் போகிறது. அப்படியிருக்கும்போது, நல்ல ஆக்கங்களை ஆழ்ந்து படிப்பது என்பது ஆகாத காரியமாக இருக்கிறது. ஆனாலும் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலை சேதமில்லாமல் எதிர்கொள்வதற்கு சிலவற்றை அறிந்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறதுஆசையைக் கட்டுப்படுத்தினால்தான் நிம்மதியாக வாழ முடியும் என்கிறார் புத்தர் . அனைத்திற்கும் ஆசைப்படு என்கிறார்கள் சிலர். இதில் எதைக்கொள்வது, எதை விடுவது? மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறதுதன்னம்பிக்கை மட்டுமே நல்ல பாதையை அமைத்து கொடுக்கக்கூடியது. இந்த நம்பிக்கையைப் பெறக்கூடிய பல வழிகளில் ஒன்று இது போன்ற ஆக்கங்களை வாசிப்பது. நம்முடைய முன்னோர்கள் இந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு பல உதாரணங்களை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பீர்பால் கதைகள். ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த படைப்புகள் அவை.

Tuesday, February 4, 2014

உலக புற்று நோய் தினம்



பவள சங்கரி


”புற்று நோய் என்பது வெறும் ஒரு வார்த்தைதான். வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல” - ஜான் டைமண்ட்

இன்று உலக புற்று நோய் தினம். புற்று நோய்களில், இரத்தப்புற்று நோய் (லுக்கிமியா) சிறுநீரகப் புற்று நோய், மார்பகப் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கருப்பை புற்று நோய், தோல் புற்று நோய் போன்ற பல வகைப்பட்ட புற்று நோய்கள் உள்ளன. உடலின் செயல்பாடுகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் செல்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியே புற்று நோயாகும்.

Monday, February 3, 2014

இதுதானா ஆப்புங்கறது..?


பவள சங்கரி


காட்சி - 1

ஹலோ, ஹலோ.. ஏனுங்க எவ்ளோ நேரமா போன் அடிக்குதே. அப்புடி என்னதான் செய்வீங்க. போன் அடிச்சா உடனே எடுக்கணும்கறது குட் மேனர்ஸ் . இதுகூட தெரியாதாக்கும்..

ஆமாம்மா எங்களுக்கு வேற பொழப்பே இல்லை பாரு.  போனையே பாத்துக்கிட்டு எப்ப அடிக்கும்னு உக்கார்ந்திருக்கோமாக்கும்.  மனுசன் காலையிலருந்து, பேல் போட்றதுக்கு மாடா உழைச்சுக்கிட்டிருந்தா உனக்கு கிண்டலா இருக்குது. பேசமாட்ட பின்ன. சுகமா வீட்டுல ஃபேனுக்கடிய உக்காந்துக்கிட்டு, ஹாயா வேலைக்காரிகிட்ட அதிகாரம் பண்ணிக்கிட்டு, நேரத்துக்கு ஜூஸ் குடிச்சு உடம்பையும் பாத்துக்கிட்டு மேடம் சுகமா இருக்கணும்னா நாங்க இங்க இப்புடி கடந்து உழைச்சாத்தானே ஆச்சு. சரி வேலை கடக்குது. என்னத்துக்கு போன் பண்ணின அதச்சொல்லு.

Thursday, January 30, 2014

பதின்மப் பருவத்தின் வாசலிலே

மதுமிதா அவர்கள் தொகுத்து வழங்கி, சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள, ‘பருவம்’ என்ற நூலில் 25 எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்புகள், ’உள்நின்று ஒளிரும் நுண்ணிய உணர்வுக் கண்ணிகள்’ என்ற தலைப்பிட்ட அழகான முன்னுரையுடன் வெளிவந்திருக்கிறது. இதில் இரண்டாவதாக வெளியாகியிருக்கும் என் கட்டுரை இது. தொகுப்பில் தேர்ந்தெடுத்த அன்புத் தோழி மதுமிதாவிற்கும், வெளியிட்டுள்ள சந்தியா பதிப்பகத்தாருக்கும் நன்றி. 




பதின்மப் பருவத்தின் வாசலில்!

பவள சங்கரி

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகைப் பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலைப் போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூச் சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)

Monday, January 27, 2014

கோவையில் கோலாகலத் தமிழ்த் திருவிழா (2)


பவள சங்கரி

தாயகம் கடந்த தமிழ்



சென்ற வாரம் (ஜனவரி 20 - 22, 2014) இந்தியாவில், கோயம்புத்தூர் மாநகரில், ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்என்ற அரசு மற்றும் அரசியல் அமைப்புகள் சாராத, தன்னார்வத் தமிழர்கள் மூலம் கோவையில் சென்ற ஆண்டு துவக்கப்பட்டதமிழ்ப் பண்பாட்டு மையம்என்ற அமைப்பின் மூலமாக உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு வழமையான அலங்காரங்களுடன் நடந்தேறியதுபுலம்பெயர் தமிழ் அறிஞர்கள் பலர் நம் தாய்மொழியைக் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தங்கள் உரை மற்றும் கட்டுரைகளை முன் வைத்தார்கள். தொன்மையும், செழுமையும் நிறைந்த  நம் தமிழ் மொழி காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறதே என்ற துக்கம் எழாமல் இல்லை.  12 நாடுகளிலிருந்து, 35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு, அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்தக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருபவருமான திரு சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் .. பொன்னுசாமி ஆகியோர் அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தினார். முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் வாழ்த்துரை வழங்கினார்.

Saturday, January 25, 2014

குடியரசு தின வாழ்த்துகள்!


பவள சங்கரி


தலையங்கம் (வல்லமை இணைய இதழ்)


republic
நம் நாடு முழுவதும் இன்று 65 வது குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்த நம் இந்தியாவை தம் குருதி மட்டுமல்லாமல் இன்னுயிரையும் ஈந்து, நம்மையெல்லாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்த தன்னலமற்ற தலைவர்களை நினைவுகூர்ந்து வணங்க வேண்டிய நாள் இது. வியாபாரம் செய்ய உள்ளே வந்து நம் நாட்டையே பிடித்துக் கொண்டவர்களிடமிருந்து அகிம்சை முறையில் போராடி 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுத் தந்தனர் நம் தேசத் தலைவர்கள். விடுதலைக்குப் பிறகு, நம் நாட்டின் சிறப்பான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மக்களாட்சியை மலரச் செய்ய முயன்றனர். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நம் இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, குடியரசு தின, கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார்கள்.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு இராஜேந்திரப் பிரசாத் அவர்கள். இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள் தம் தாய்த் திருநாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

Friday, January 24, 2014

கோவையில் கோலாகலத் தமிழ்த் திருவிழா!


பவள சங்கரி 
DSC09929
ஜனவரி 20, 2014 திங்கட்கிழமை மாலை தொடங்கி, கடந்த மூன்று நாட்களாக கோவை மெடிகல் சென்டர், மருத்துவ மையத்தில் ’தாயகம் கடந்த தமிழ் ’ என்ற உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 19ம் நாள், கோவை மெடிக்கல் சென்டர் – மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் தலைவருமான,மருத்துவர். நல்ல பழனிசாமி அவர்களின் முயற்சியால், ”தமிழின் வளம் தமிழர் நலம்” என்னும் இலக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது தமிழ் பண்பாட்டு மையம். ‘எங்கெங்கு காணினும் தமிழனடா’ என்று சொல்லும் அளவிற்கு, உலகம் முழுவதும் பரவி வாழும் நம் தமிழர்களின் ஆழ்ந்த மொழிப்பற்று, எத்தகையச் சூழலிலும், எதுவிதமான நெருக்கடியிலும் உயிர்ப்போடு வாழ்ந்து வரும் நம் தமிழ் மொழிக்கு மேலும் வளம் சேர்க்கும் வகையில் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற உயிர்த் துடிப்பில் உருவானதுதான் இம்மையம். நம் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் வளமை குறித்து அளவற்ற பெருமிதம் கொள்ளும் அளவிற்கு, நாம் எதிர்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கு ஒரு செல்வமாக இதனை அளித்துவிட்டுப் போகும் பொறுப்பு எனும் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற கருத்தின் ஆணி வேருக்கு உரம் இடும் வகையில், தமிழ் மக்களிடம், தமிழ் ஓர் உலகளாவிய மொழி உலகின் பல பகுதிகளிலிருந்தும் அது கொடைகள் பெறுகிறது என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும் . அப்படிச் செய்வதால் இயல்பாக தமிழர் மனதில் எழும் பெருமித உணர்வு, தமிழ் மொழியைத் தொடர்ந்து மேன்மைப்படுத்தி காப்பாற்றி வரக்கூடும் என்ற சீரிய ஆக்கப்பூர்வமான, உளவியல் அணுகுமுறையிலான சிந்தனையுடன் 12 நாடுகளிலிருந்து, 35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு, அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்க்காகவும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருபவருமான திரு சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் ப.க. பொன்னுசாமி ஆகியோர் அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தி சிறப்பித்தார்கள்.  முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்  அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...