Saturday, October 18, 2014

கவறு


பவள சங்கரி



சதாசர்வமும் உருண்டாலும் உதிருவதில்லை
வீழ்ந்தால் நிகழ்வாக - வீழாமல் கனவாக
விதைத்தவைகள் விதியென்னும் வீதியாய்
வெட்டும் விவேகமாய் வினையைச் சுமந்தபடி
ஆட்டமும் ஓட்டமும் நாட்டமுடன் நயத்துடன்
பாட்டமும் பட்டமும் பதவிசாய் பந்தமாய்
நேசமும் நிசமும் கடைச்சரக்கான கவறுக்காய்கள்!
நொறுங்கிப்போகும் கவறும்கூட  காவியமாகும்!!

ராமனுக்கொரு கவறு சீதைதானது!
ராவணனுக்கொரு கவறு சூர்ப்பனகை!
துரோணருக்கொரு கவறு ஏகலைவன்!
கவறுக்கொரு காவலரண் கவர்ந்தவருக்கே!
சொற்சதங்கைச் சொக்கட்டானின் கபடமன்றி
கற்றைக்கற்றையாய் கருத்துக்காட்சிகளின் வசீகரம்!
பொற்கைப் பாண்டியனின் எழுதுகோலின் களிநடனம்!
கவறுகள் உருண்டோடுமோசை புவிவிசையின் மெல்லிசை!!



ஒன்பதாம் தந்திரம் 17. மறைபொருட் கூற்று - பத்தாம் திருமுறை திருமூலர் இயற்றிய திருமந்திரம்





1 காயம் பல கை கவறு ஐந்து கண் மூன்றா
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்து ஓர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே.

 
2 தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி
மாறிக் கிடக்கும் வகை அறிவார் இல்லை
மாறிக் கிடக்கும் வகை அறிவாளர்க்கு
ஊறிக் கிடந்தது என் உள் அன்பு தானே.

Sunday, October 12, 2014

சுதந்திரப்பள்ளு!





சுதந்திரப்பள்ளு! ஊருக்குகந்த பாடமதையள்ளு!
பாடும் புள்ளும்  ஊரும் தேனும் ஒன்றெனக்கொள்ளு!
ஓடிக்களைத்த ஒத்தைக் குயிலொன்னு
ஓயாமல் ஓசையெழுப்பியபடி
கூவிய மொழியெல்லாம் முச்சந்தியில்
முக்காடிட்டு முகம் புதைத்தபடி
தேடிய புள்ளின் கலங்கிய சித்தம்
பதறாமல் சிதறாமல் பறந்தபடி

Monday, October 6, 2014

அன்பெனும் சிறைக்குள்!


அன்பினிய நண்பர்களுக்கு,
வணக்கம். நேற்று கலைவாணிக்குகந்த, உன்னதமான விசயதசமி தினத்தில் பழனியப்பா பதிப்பகத்தார் என்னுடைய அடுத்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளதை என் வரமாகக் கருதுகிறேன். மிக அழகாக அணிந்துரை வழங்கி எம்மை கௌரவித்துள்ள அன்பினிய நண்பர்கள் திரு இசைக்கவி ரமணன் மற்றும் திரு கிரேசி மோகன் அவர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றி.




Saturday, October 4, 2014

ஹாங்க் காங்க் விமான நிலையம்


ஹாங்க் காங்க் , சீனப்பேரரசின் ஆளுமையின் கீழ் சில புரிந்துணர்வுகளுடன் ஏற்பட்ட ஆட்சி தற்போது இங்கு நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து சுமாராக 4000 மைல் தொலைவில் உள்ளது. உலக வணிகத் தலை நகரங்களின் ஒன்றாகக் கருதப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது... அனைத்து வகையான மக்களும், அமைதியுடனும், செழிப்புடனும் வாழ்ந்த காலங்கள் போக, இன்று சுதந்திர வேட்கையுடன் கூடிய மக்கள் ஒரு புறமும், அதற்கு எதிர்ப்பாக ஒரு பிரிவினரும், கலவரம் உணர்வுகொண்டு, பௌத்த கொள்கைகளின்படி அமைதியுடன் வாழ்ந்த காலங்கள் மாறிவரும் நிலை ஏற்படுள்ளது. 99 ஆண்டுகள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தபோது பொருளாதார வளர்ச்சியடைந்த இந்த மண் அவர்களுடைய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சீனப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்துள்ளது. சுதந்ததிரமாகத் தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தணியாத தாகத்தினால், காந்தி கண்ட சுயராச்சியம் என்ற உணர்வு அவர்களுக்கும் ஏற்பட்டு, இன்று வீதிகளில், பல ஆயிரம் மக்கள் இறங்கி போரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் கருத்து ஏற்புடையதோ அல்லவோ, என்றாலும் காந்திய வழியில் போராடுவது பாராட்டிற்குரியது. வானும், மண்ணும், கடலும், மலையும் இணைந்து வளம் கொழிப்பாதாக் இருக்கும் இந்த பூமி என்றென்றும் வளத்துடன் வாழ வாழ்த்துவோம்.. இதோ சற்று முன் எடுத்த சில புகைப்படங்கள்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...