Saturday, January 18, 2014

காளியின் களிநடனம்!


பவள சங்கரி



உள்ளத்தை அளக்க ஆயிரம் வழிகள்
உள்ளதை விளக்க முடியாத மொழிகள்
கள்ளத்தைக் காட்டும் காவியங்கள்
காப்பியமாய் கனிந்தெழும் துயரங்கள்!


ஊழ்வினை உறுத்துவந்து
வாட்டும் வாதனைக்கும்
பாழ்வினை வழக்கொழிந்து
போனதுக்கும் விடுதலை

என்றோ அணைந்த நெருப்பில்
பூத்த ஃபீனிக்ஸ் பறவையின்
 கனன்று தகித்து சுட்டெரிக்கும்
சொல்லம்புகளின் முனையில் புழுவின் துடிப்பு

மனிதம் தேடி ஓய்ந்து மாய்ந்துபோன
மதிகெட்ட மானுடம் மனம்கெட்டு
ரணமாகி குருதி பொங்கும் இதயம்
தூண்டில் முள்ளில் சிக்கித் தவிக்கும் அவலம்!!

சிந்திய ஒவ்வொரு துளியும் சிறகுவிரித்து
புழுதி கிளப்பி போர்க்கொடி உயர்த்தி
காவியக் கணக்கை கருத்தில் ஏற்றி
காளியின் களிநடன ஒளி வடிவக்காட்சி!!


KALIKA  DEVI

(A Symbol of death and destruction)

Kali is derived from the word Kaala which stands for two meanings -
1. time or age 2. darkness. It is believed that there was a state
of total darkness before the origin of Universe;
no life existed anywhere! Total Chaos! The age of death and destruction!

Actually, death is the cause of a new life and destruction is the
cause of a new shape. This energy is represented as Meri Maiya Kalika.
SHE produces the netherworlds and destroys them, to HER desire or will



2 comments:

  1. /// மனிதம் தேடி ஓய்ந்து மாய்ந்துபோன
    மதிகெட்ட மானுடம் மனம்கெட்டு
    ரணமாகி குருதி பொங்கும் இதயம்
    தூண்டில் முள்ளில் சிக்கித் தவிக்கும் அவலம்!! ///

    உண்மை...

    ReplyDelete
  2. காளியின் களிநடன ஒளி வடிவக்காட்சி!!

    படமும் பாடலும் சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete