Tuesday, July 14, 2015

இந்த 21ம் நூற்றாண்டிலுமா இப்படி..?



நம் இந்தியர்களிடம் இருக்கும் சில மூட நம்பிக்கைகளாம்.. நாம் இருக்கும் இந்த 21ம் நூற்றாண்டிலுமா இப்படி..?


1. இடது கண் துடித்தால் ஏதோ கெட்டது நடக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

2. மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகளுடன் பால் அல்லது பால் தயாரிப்புகளை உட்கொண்டால் தோல் வியாதி வரும் என்று நம்புகிறார்கள்.

3. பூனை குறுக்கே ஓடினால் அது அபசகுணம் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

4. வீட்டை விட்டு வெளியே கிளம்புகையில் யாராவது எங்கே போகிறீர்கள் என்று கேட்டால் போதும். போகும் போதே எங்கே போகிற என்று கேட்டுவிட்டீர்களா இனி அந்த காரியம் நடந்தது போன்று தான் என்று அலுத்துக்கொள்வார்கள்.


5. காக்கா வீட்டு வாசல் அல்லது ஜன்னலில் வந்து உட்கார்ந்து கரைந்தால் உடனே நம் வீட்டுக்கு விருந்தாளிகள் வருவார்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.

6. வீட்டு வாசல், வாகனங்களில் எலுமிச்சை, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு கயிறில் கட்டித் தொங்கவிட்டால் திருஷ்டிபடாதாம்

7. விளக்கு வைத்த பிறகு யாருக்காவது பணம் கொடுத்தால் நம் செல்வமெல்லாம் அழிந்துபோய்விடும் என்று ஒரு மூட நம்பிக்கை.

8. வீட்டில் இருந்து வெளியே செல்கையில் எதிரே யாராவது நிறைகுடத்துடன் வந்தால் நம் காரியம் நல்லபடியாக முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

9. உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

10. ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் அது குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.


No comments:

Post a Comment