Tuesday, July 14, 2015

குழந்தைகளுக்கு சுயநலச் சிந்தையை ஊட்டி வளர்க்கிறோமோ?



எனக்கு ஒரு சந்தேகம் சாமியோவ்....

யூ டியூபில் பல இலட்சம் குழந்தைகளைக் கவர்ந்த தமிழ் பாடல் இது. குழந்தைப் பாடல் என்பதற்கு குழந்தைகளை நன்னெறிப்படுத்தி, சிறந்த மனிதனாக உருவாக்க வேண்டிய கடமை உள்ளது அல்லவா.. இது போன்ற பாடல்கள் அதைச் சரியாக செய்கிறதா என்ற அச்சம் ஏற்படுத்துகிறது. உலகில் நடக்கும் யதார்த்தம்தான் என்றாலும் அதை எடுத்து விவரிக்கும் விதம் குழந்தைகளின் எண்ணங்களை திசை திருப்புவதாக அமைந்துவிடுகிறது. இந்த பாட்டு நாம் அறிந்ததுதான்...



கொக்கு ஒன்னு குளக்கரையில் 
மீனுக்காக காத்திருந்தது..
குளத்தில் துள்ளி விளையாடும்
மீனுக்கும் அது தெரியல
கரையில் நீந்தி வந்துவிட
நேரம் பார்த்து காத்திருந்த
கொக்கும் சந்தோசமாய் அதை 
இலாவகமாய் பிடித்துத் தின்றது. 
கொக்கைப் போல நாமும் 
சமயம் பார்த்து காத்திருந்து 
காரியத்தை கச்சிதமாய் முடிக்கணும்



என்ற வகையில் அமைந்த பாடல் இது. குழந்தைகளின் பிஞ்சு மனதில், நாம் வாழ அடுத்தவரை வதைப்பதில் தவறில்லை, என்ற சுயநலச் சிந்தையை ஊட்டி வளர்க்கிறோமோ? இந்த எண்ணம் அந்த பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை விதைக்கிறதோ.. survival of the fittest என்பதை ஊட்டி வளர்ப்பதன் தேவையா இது? எது சரி?

1 comment:

  1. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து

    ReplyDelete