Wednesday, May 11, 2016

மக்கள் கேள்வி மேடை!


தமிழ்நாடு சட்டப் பேரவையின் 15-ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது. மிகப் பிரம்மாண்டமாக, 5.50 கோடி வாக்காளர்கள், 234 சட்டப் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். அதில் பெரும்பான்மை கொண்ட கட்சித் தலைவரையோ அல்லது கூட்டணித் தலைவரையோ ஆளுநர் ஆட்சியமைக்க உரிமை வழங்குவார். அவர்தான் மாநில முதல்வராக அறிவிக்கப்படுவார்.
அரசியலுக்கு வருவது என்பது மக்களுக்கு சேவை செய்வது, தன்னலம் கருதாத முழுமையான மக்கள் தொண்டு என்ற எண்ணமே துளியுமின்றி, அரசியல்வாதியாவது என்பது சிரமமின்றி பணம் சம்பாதிக்கவும், அதிகாரம் செலுத்தவும் வழிவகுப்பது என்ற எண்ணமே அரசியல்வாதிகளுக்கு மேலோங்கியிருப்பது வருந்தத்தக்கது. அதிகாரமும் பண வசதியும் தேவைப்படுகிறது என்பதற்காகவே பலரும் அரசியலுக்கு வருகிறார்கள்.
வாக்காளர்களிடம் இருக்கும் வாக்கு அதிகமான சக்தி பெற்றது. அதிகாரம் கொடுக்கக் கூடியது போன்றவற்றைப் பல வாக்காளர்கள் அறியவில்லை என்பதே சிறு இலவசங்கள் மூலம் மக்களை எளிதாக விலைக்கு வாங்க வழியமைத்துவிடுகிறது. அப்பட்டிப்பட்ட அற்பமான பொருட்களுக்கு விலைபோய் வாக்களித்து விடுவதால் அது ஐந்தாண்டு காலத்திற்கான பாதிப்பு மட்டுமல்ல; பல ஆண்டுகளுக்கான பாதிப்பாகிவிடுகிறது என்ற விழிப்புணர்வே சிறிதும் இல்லாமல் செயல்படும் மக்களாலேயே இதுபோன்ற பாதிப்புகள் நேர்ந்துவிடுகின்றன. தேர்தல் என்பது மகிழ்ச்சியாகக் கொண்டாடும் திருவிழா அல்ல. அங்கு கேளிக்கைகளுக்கோ கொண்டாட்டங்களுக்கோ இடம் இல்லை என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும். தன்னலத்துடன் சமூக நலமும் சார்ந்து சிந்தித்து செயல்படவேண்டிய விசயம். மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே செய்வது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மக்களாட்சியை நலமிக்க நல்லாட்சியாக நிலைபெறச் செய்வதும் குடிமக்களாகிய நம் கையில்தான் உள்ளது.
சனநாயகத்தில் தேர்தல் என்பதுதான் உச்ச நிலை. அரசியல் அதிகாரம் என்பது தேர்தல் வழியாக மட்டுமே வருகிறது. அதனால் பொதுமக்களின் பொறுப்பான பங்களிப்பு இதில் அவசியம் இருக்க வேண்டும். நூறு சதவிகிதம் வாக்களிப்பு மட்டுமே மக்களின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதோடு அதுவே சனநாயகத்தின் வெற்றி என்பதுமாகும். வாக்களிப்பது அரசியல் கடமை அல்ல, அரசு மக்களுக்கு வழங்கும் உரிமை என்பதை உணராதவர்களுக்கு உணரச்செய்ய வேண்டியதும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை ஊழியர்களின் அத்தியாவசியக் கடமை. உண்மையான அரசியல் கட்சிகள், நேர்மையான வேட்பாளர்கள் என்று நம்பிக்கை ஏற்பட்டால் மட்டும் வாக்களிக்கவேண்டும். தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தொகுதியில் தலை காட்டும் வேட்பாளர்களையும், சுயநலத்திற்காக மட்டும் அரசியலுக்கு வரும் வேட்பாளர்களை இனம்கண்டு ஒதுக்கும் வல்லமையும் பெறவேண்டும். பேரணிகள், மாநாடுகள் வெற்று அறிக்கைகள் கொண்டு மக்கள் மனம் கவர்ந்துவிட முடியாது என்பதையே தேர்தல் சொல்லிக் கொண்டிருக்கிறது.பேரணிகள், மாநாடுகள் நம்பகமற்ற அறிக்கைகள் போன்றவைகள் மட்டும் மக்கள் மனம் கவர்ந்துவிட முடியாது என்பதையும் வேட்பாளர்களும் உணரவேண்டும். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே புதியதொரு முயற்சியாக வேட்பாளர்களும், வாக்களர்களும் நேரிடையாகச் சந்திக்கும், ‘மக்கள் கேள்வி மேடை!’ என்ற நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வழக்கறிஞர், கவிமாமணி திரு கே.இரவி அவர்களின் இடைவிடா முயற்சியின் பயனாக  இத்திட்டம் உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் நடந்த இந்த அரிய நிகழ்ச்சியின் தொகுப்பைக் காண்போம்….
082b69da-cb89-4372-9b9e-da76ac54590c

We The People Of India

——————————————————————–

No.1.A Stone Link Avenue, Off Canal bank Road, R.A.Puram, Chennai 600028

‘We The People of India’ is a   Non political, Non Profit  Organisation, functioning all over Tamilnadu. The main aim is to create National Spirit. During Elections we have been organizing events to promote Voters’ Awareness with the  broad network that we have all over Tamil Nadu. We have created an Audio and Video program exclusively for this election. Tamilnadu State Election Commission has approved the program and it has gone viral in YouTube.
வணக்கம். வாக்காளர்களும், வேட்பாளர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர்களும், வேட்பாளர்களும், சந்திக்கக்கூடிய மக்கள் கேள்வி மேடை எனும் இனிய நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமை 7.5.2016 அன்று ஈரோடு யாளி ரெசிடெண்சி எனும் விடுதியில் நடைபெற்றது. அது சமயம் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் திரளாக கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். பல பொது தொண்டு நிறுவனங்களும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
We The People Of India
நுகர்வோர் பாதுகாப்பு மையம்
தேசிய நல விழிப்புணர்வு இயக்கம்
வரி செலுத்துவோர் சங்கம், ஈரோடு
ரோட்டரி சங்கங்கள், ஈரோடு
ரவுண்ட் டேபிள், ஈரோடு
அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு
ஒளிரும் ஈரோடு
அக்கறை, ஈரோடு
சித்தார்த்தா பள்ளி, ஈரோடு.

ஈரோடு கேட்கிறது!

வாக்காளர்கள் கேட்கிறோம்!

வேட்பாளர்களே பதிலளியுங்கள்!

  1. எங்கள் தொகுதியின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும் உங்கள் திட்டம், வாக்குறுதி என்ன?
  1. பதவிக்கு வந்த பின்னும் மாதம் ஒருமுறை மக்களைச் சந்திப்பீர்களா?
  1. உங்கள் கட்சியைவிட இந்தத் தொகுதி முன்னேற்றம்தான் உங்களுக்கு முக்கியம். இந்தத் தொகுதி மக்கள்தான் உங்கள் முதல் தலைவர்கள் என்று அறிவிப்பீர்களா?
  1. அனைத்து மருத்துவச் சேவைப் பிரிவுகள்கொண்ட 1000 படுக்கை வசதி உள்ள மருத்துவக் கல்லூரி இணைந்த மருத்துவமனை தக்க சிறப்புத்திறன் மருத்துவர்களுடன் ஈரோட்டில் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றித் தருவீர்களா?
  1. ஊராட்சிக் கோட்டையிலிருந்து ஈரோடு நகருக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டம் விரைவில் நடைபெற நடவடிக்கை எடுப்பீர்களா?
  1. தொழிற்சாலைக் கழிவுகளாலும், நகராட்சி, ஊராட்சிக் கழிவுகளாலும் நகரின் நீரோட்டம் மாசுபடும் கவலை ஒருபுறம் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் நகரின் தொழில் ஆதாரமே பாதிக்கப்படுமோ என்ற கவலை மறுபுறம் அச்சுறுத்தும் சூழலில் அக்கவலைகளைப்போக்க நடவடிக்கை எடுப்பீர்களா?
  1. ஈரோட்டு சாலைப்போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலை சீரமைத்தல், மேம்பாலம் கட்டுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற செயல்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
  1. திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம், உரம் போன்ற பயனுள்ள மாற்று சக்திகள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

1 comment:

  1. நல்ல விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete