Thursday, September 19, 2013
Tuesday, September 17, 2013
பிரசவம் எனும் மறுபிறவி!
பவள சங்கரி
பிரசவம் என்பது ஒரு பெண்ணிற்கு மறு பிறவி . ஒரு குழந்தை கருவாகி, உயிராகி, இந்த பூமியில் பிறப்பதற்குள் ஒரு தாய் படும் துயர் சொல்லி மாளாது. ஆனாலும் முகம் தெரியாத அந்த உயிரின் நினைவே அத்தாயின் அத்துனைத் துன்பங்களையும் மறையச்செய்துவிடும். ஒரு காலத்தில் பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து, அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே குழந்தைப் பேறுக்குத் தயாராகிவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலையே வேறு. பெரும்பாலும் இன்று இளம் வயது திருமணங்கள் குறைந்துள்ளது எனலாம். நன்கு படித்து ஓரளவிற்கு நல்ல நிலைக்கு வந்த பின்பே பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்று உறுதியாக இருப்பதோடு, குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள். மருத்துவ விஞ்ஞானம் இன்று பெருமளவில் பரந்து விரிந்துள்ள சூழ்நிலையில் பல நவீன சிகிச்சை முறைகள் வாழ்க்கையை ஓரளவிற்கு எளிமையாக்கியுள்ளதோடு குழந்தை பேறு போன்ற சுகமான சுமைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. அந்த வகையில் பிரசவ முறைகளிலும் பல மாற்றங்களும், நவீன சிகிச்சை முறைகளும் வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்க முடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூக சேவகி சுனிதா கிருஷ்ணன். யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ?
Sunday, September 15, 2013
கற்றல் எனும் சுடரொளி!
பவள சங்கரி
கற்றல்மட்டுமே என்றும் மார்கண்டேயனாக்குகிறது
காற்றாய் நம்மை கனமில்லாமல் சுமந்துசெல்வதும் கற்றல்தான்!
அறுசுவையையும் அடிச்சுவடியாய் ஆக்கிவிடுகிறது
மறுபதிவையும் பதமாய் ஆக்கி்த்தந்து ஆச்சரியமூட்டுகிறது!
படரக்கற்பதும் சுடராய் ஒளிவீசவும் பக்குவமாய் பாட்டெழுதவும்
தனலும் தகிக்காமல் நந்தலாலாவாய் தீண்டுமின்பம் பெறச்செய்கிறது!
எச்சத்தின் ஆழத்தில் விழுதுபரப்பிய மரமானாலும் ஆணவமலத்தின்
மிச்சத்தையும் பட்டறிவின் சொச்சத்தையும் பக்குவமாய் விலக்கிவிட்டது!
துரோணாச்சாரியர்களும், ஏகலைவர்களும் போதித்த பாடங்களின்
சாரங்களை சமத்தாய் உள்வாங்க சாந்தமும் சத்தாயானது!
சேர்ந்த மண்ணின் தன்மையை தன்னலமாக்கிய தரம்
தானின்றி அமையாது உலகு என்ற தனித்தன்மையின் தன்னடக்கம்!
சூதையும் வாதையும் சுனாமியாய் வீறுகொண்டு அழித்தாலும்
பேதையாய் வாழும் மாந்தருக்கு நிதானத்தையும் போதிக்கிறது!
காட்சிகளற்ற பார்வையின் வீரியமும் மாசற்ற சோதியாய்
பறவையாய் பாசத்துடன் நேசமும் ஏற்கும் நம்பிக்கையாய்!
சரசரத்து வழிகாட்டும் சருகுகள்கூட தீயாய் அழிக்கும் தீமைகளை
பரபரப்பாய் இயங்கும் வாழ்க்கைக்குக்கூட பாதையமைக்கும் மாயம்!
படத்திற்கு நன்றி:
http://www.google.co.in/imgres?imgurl=http://www.littlenaturalcottage.com/wp-content/uploads/2011/07/521993Little-Girl-Learning-Her-Abc-s-Posters.jpg&imgrefurl=http://www.littlenaturalcottage.com/should-a-girl-go-to-college/&h=450&w=338&sz=31&tbnid=0yz6TcfOG5P0PM:&tbnh=84&tbnw=63&zoom=1&usg=__3Eb1bLuXAMemE00qmCWn76qUsTk=&docid=RkAV1RpH2wGT0M&sa=X&ei=JZI2Uoq4J8e4rAeUooFg&ved=0CDAQ9QEwAQ&dur=4777
Saturday, September 14, 2013
ஏன் இப்படி?
பவள சங்கரி
சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதிய கதை. இளகிய மனம் படைத்தவர்கள் படிக்காமல் இருப்பது நல்லது. இப்படியும் நடக்குமா? உண்மையாக இருக்குமா? அல்லது வணிக நோக்கில் இப்படி ஒரு தந்திரமோ என்ற எண்ணம் கூட தோன்றலாம்.. இல்லைங்க.. இது சத்தியமாக நடந்த ஒரு சம்பவம். நடக்கக்கூடிய சம்பவம்தான்.. படிப்பினை ஊட்டும் சம்பவம்தான்.. வாசித்துப் பாருங்கள் புரியும்!
“என்னங்க,
உங்க அம்மாகிட்ட இருந்து இன்னைக்கும் தபால்
வந்திருக்கு. இந்த வாரத்தில் மட்டும்
இது இரண்டாவது தபால். பாவங்க
அத்தை, அவுங்களுக்கு ஒரு பதில் தபால்கூட
போட முடியாதா உங்களுக்கு? நாம
பதில் போடாட்டியும், அவங்க தவறாம வாரம்
இரண்டு தபால் போட்டுக்கிட்டு இருக்காங்க.
இந்த தடவை ரொம்ப விசனமா
எழுதியிருக்காங்க. அந்த டேபிள் மேலதான்
இருக்கு, எடுத்துப்பாருங்க. ஒரு நாலு வரி
பதில் கடுதாசியாவது எழுதிப் போடுங்க”
“போடலாம்.
என்னத்த எழுதறது. நாம எழுதப்போற எதுவும்
அவங்கள சந்தோசப்படுத்தப் போறதில்ல.. அதுக்கு சும்மாவே இருக்கலாம்னு
தோணுது சந்திரா.”
Thursday, September 12, 2013
சிறுகை துளாவி... சிற்றுளி எடுத்து!
பவள சங்கரி
எங்கோ ஓரு மூலையில் ஒரு திரை சட்டென்று விலகுகிறது.. வெடித்துக்கொண்டு சிதறுகிறது சொற்களாக.. ஆசானின் அரிச்சுவடியை சிரமேற்கொண்டு சிறுகை துளாவி சிற்றுளி எடுத்து சிரத்தையாய் வடிவமைக்கும் முயற்சி..தவறானால் தண்டனிட்டு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்!
என்றோ காயாத கான்கிரீட் தரையில்
பதிந்து கிடந்த நாயின் அடியொற்றி
பற்றில்லாக் கால்களின் பாதையறியா பயணம்.
கந்தலாகிப்போன வறட்டு கௌரவம்
கதைபல பேசி கட்டாந்தரையாக்கியதால்
நத்தையாய் சுருண்டு போனது உயிர்.
பூமியாய் பொறுமையும்
சோதியாய் தனிமையும்
போதியாய் ஞானமும்
சாமியாய் வரமும் வந்தது
ஓடுகூட பாரமாகித்தான் போகிறது
கூடுவிட்டு கூடுபாய ஊர்ந்து தேய்க்கிறது
கடக்க வேண்டிய காததூரத்தையும்!
படத்திற்கு நன்றி:
பெருமதிப்பிற்குரிய கவிஞர் சுந்தர்ஜி அவர்களின் ‘அதனதன் இடம்’ என்ற கவிதையின் இன்ஸ்பிரேஷன் தான் இந்த என் கவிதை! அவரிடம் சம்மதம் பெற்று படத்தையும் சுட்டுவிட்டேன்! கவிஞர் சுந்தர்ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Tuesday, September 10, 2013
வினை தீர்க்கும் விநாயகன்!
பவள சங்கரி
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நில உலாவிய நீர் மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். காணும் ஒவ்வொரு பொருளும் இறை வடிவாகக் காட்சியளிப்பதே தமிழர்தம் அறநெறியாம். கீதையில் கண்ணன் அருளும் மொழியும் இதுதான். மலரிலும் மகேசனைக் கண்ட தாயுமானவர் சுவாமிகள் அருளியதும், ‘பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி ` என்பதுதான். பார்க்கின்ற இடமெல்லாம் நிறைந்திருக்கிற பரிபூரண ஆனந்தம் ஆண்டவன் என்கிறார் அவர். அதாவது நீர், வான், நெருப்பு, காற்று, சந்திரன், சூரியன், மண், உயிர்கள் என எட்டுப் பொருட்களிலும் நிறைந்துள்ளவன் இறைவன் . உடலில் பேதமிருந்தாலும், இறைவன் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் . இந்த உயரிய தத்துவத்தின் மொத்த உருவமே விநாயகப் பெருமானின் திருவுருவமாகும். பூமியின் ஒரு உருவகம்தான் விநாயகர் உருவம்..
யானை முகமும், மனித உடலும் கொண்டு அனைத்து உயிரும் சமம் என்று சொல்லாமல் சொல்கிறானோ?
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...