Sunday, March 27, 2016

கோபம் ஆகாதுங்க…!



பவள சங்கரி
images (2)அதிக கோபம் என்னென்ன பிரச்சனையை ஏற்படுத்தும் என்று நாம் அறியாததல்ல..  ஒருவர் அதிகமாக கோபப்படும்போது அவருக்குள் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து உடலினுள் ஒருவகை இரசாயணம் உருவாகிறதாம். இதையும் ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்திருக்கிறாராம். அதீதமான அச்சத்திலோ, அல்லது கோபத்திலோ உள்ள ஒருவரிடமிருந்து இரத்தத்தை எடுத்து  பரிசோதனைக்காக  சோதனைக் கூடத்தில் இருந்த பன்றிகளுக்குச் செலுத்திப்பார்த்தபோது அவை இரண்டு நிமிடங்களில் இறந்துபோய்விட்டதாம். ஓர் உயிரைக் கொல்லும் அளவிற்கு  பலம் வாய்ந்த இரசாயணம் நமக்குள் எத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தோற்றுவிக்கும்? ஆம் அதீதமான பயம், கோபம், எரிச்சல், ஏமாற்றம், மன உளைச்சல் போன்றவைகள்  தோற்றுவிக்கும் இரசாயணம் மனிதனின் உடலையும் உயிரையும் பெரிதும் பாதிக்கவல்லது! என ஆராய்ச்சியாளர்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர். சுருக்கமா சொல்லணும்னா நமது மனது தான் நமது உடலின் சிற்பி. நம் உடலை நல்ல சிலையாகவோ அல்லது பின்னமான உருவமாகவோ அமைப்பது நம் கையில்தான் உள்ளது!

http://www.vallamai.com/?p=67458

Saturday, March 26, 2016

’நேர்மாற்று உளவியல்’



‘நேர்மாற்று உளவியல்’ அப்படின்னு ஒரு விசயம் இருக்கு தெரியுங்களா..? இது  வெற்றிக்கான ஒரு எளிதான உத்தி. சமீபத்தில் ஒரு கடற்கரையில் ஒரு தேநீர் விற்கும் சிறுவனிடம் இதைக்கண்டு ஆச்சரியப்பட்டேன். செம அறிவாளி போல… இந்தப் பையன் இருக்க வேண்டிய இடமே வேறு.. பிற்காலத்துல பெரிய ஆளா வருவாயப்பா என்று வாழ்த்திவிட்டுத்தான் வந்தேன்..  அப்படி என்ன செய்தான்னுதானே யோசிக்கறீங்க..? பின்ன என்னங்க.. எல்லோரும் டீ…  டீ…  சாய்… சூப்பர் பால் டீ..  சூப்பர் ஏலக்காய் டீ…..   சூப்பர் இஞ்சி டீ அப்படீன்னு விற்கறத பார்த்திருக்கோம். இவன் மட்டும் ‘படு மோசமான டீ..’ ரொம்ப ரொம்ப மோசமான டீ..’ அப்படீன்னு கூவிக்கொண்டிருந்தான்.  என்ன ஆச்சரியம் கொஞ்ச நேரத்தில் அத்தனை தேநீரையும் விற்று தீர்த்து விட்டான் அந்த சிறுவன். தேநீர் அதிகமாக குடிக்கும் வழக்கம் இல்லாத நான்கூட அப்படி என்ன மோசமான டீ, குடித்துதான் பார்க்கலாமே என்று வாங்கிக் குடித்தேன் என்றால் பாருங்கள். இதே உத்தியை சமீபத்தில்  விஜய் தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் பயன்படுத்தி தன் நூல் ஒன்றிற்கு ‘இதை வாங்க வேண்டாம்’ என்று எதிர்மறையாக தலைப்பிட்டு விற்பனையில் சாதனை படைத்தாரே, அது  நினைவிருக்குமே? என்னமா யோசிக்கிறாய்ங்க...... 

http://www.vallamai.com/?p=67454

Thursday, March 24, 2016

புத்திசாலித்தனமும், அறிவும் ஒன்றா?

பவள சங்கரி
images
சாக்ரடீசு மிக யதார்தமான அறிஞர். ஒரு நாள் அவருடைய அபிமானி ஒருவர் அவரிடம் வந்து, ஐயா புத்திசாலித்தனமும், அறிவும் ஒன்றா? இல்லையென்றால் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? என்று வினவுகிறார்.
அவரும் மெல்லிய புன்னகையுடன், “அதோ அங்கு திண்ணையில் உட்கார்ந்திருக்காரே அந்த பெரியவர்கிட்ட போய், இங்கிருந்து அடுத்த ஊருக்குப்போக எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டுவிட்டு வா” என்றார்.
அந்த மனிதரும் அப்படியே போய் அந்தப் பெரியவரிடம் கேட்க, அவரோ பதிலேதும் கூறாமல் மேலும், கீழும் பார்த்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டாராம். இவரும் விடாமல் 2,3 முறை கேட்டுவிட்டு, பாவம் மனநிலை சரியில்லாதவர்போல என்று நினைத்து திரும்பிச்செல்ல நான்கு அடி எடுத்து வைத்தார்.
உடனே அந்தப் பெரியவர், ‘யப்பா, நீ ஒரு 15 நிமிடத்தில் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்துவிடலாம்’ என்று சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டார்.
இத்தனை முறை கேட்டு பதில் சொல்லாத பெரியவர் திடீரென்று ஏன் சொன்னார் என்ற ஆச்சரியத்துடன், அவரையே அதற்கான காரணமும் கேட்டார்.
‘ஏம்ப்பா நீ எவ்வளவு வேகமாக நடக்கக்கூடியவன் என்று தெரிந்தால்தானே நீ கடக்க வேண்டிய தூரத்திற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று நான் கணக்கிட முடியும்’ என்றவரை ஆச்சரியமாகப் பார்த்ததோடு கும்பிட்டுச் சென்றவன் அதை அப்படியே போய் சாக்ரடீசிடம் சொல்கிறார்.
அதற்கு சாக்ரடீசு அதே புன்னகையுடன், ‘இதற்குப் பெயர்தானப்பா புத்திசாலித்தனம்’ என்றாராம்!

http://www.vallamai.com/?p=67425

Wednesday, March 23, 2016

’கடலோடி’ நரசய்யா



http://www.vallamai.com/?p=67399

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
வள்ளுவனார் வழியில் வாழ் அறிவுடையார் இவர் என்பதை இவருடன் சிறிது பொழுதே உரையாடும் எவரும் எளிதில் உணரக்கூடும். நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றிய பெருந்தகை, கடலாய்வறிஞர், வரலாற்றாய்வாளர், சிறந்த கட்டுரையாளர், கதாசிரியர், தேச பக்தர், மனிதாபிமானி என பன்முகங்கள் கொண்ட ஆளுமை இவர். கப்பற் பொறியியல் கல்வியில் தேர்ச்சி பெற்ற இவர் ‘நரசய்யா’ என அனைவராலும் அன்பாக அழைக்கப்பெறும் , ஒரிசா மாநிலத்தின், பெரகாம்பூர் என்னும் இடத்தில் பிறந்தவரான, காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா என்பவர். இந்திய கடற்படை கப்பல்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பேறு பெற்றவர். அதன்பின் ஐ.என்.எஸ்.விக்ராந்த் என்ற விமானந்தாங்கிக் கப்பலின் விமானத் தளத்தின் தலைவராக (ஃபிளைட் டெக் சீஃப்) பணியாற்றினார். பிறகு வணிகக் கப்பலில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இறுதியாக விசாகப்பட்டினத் துறைமுகத்தில் 1991ஆம் ஆண்டில் தலைமைப் பொறியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். துறைமுகப் பணியின் இடையில் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்கவேண்டி கடற்படையால் அழைக்கப்பட்டு அதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. உலக வங்கியின் அழைப்பின்பேரில் ஆலோசகராகவும், கம்போடியா புனர் நிர்மாணத்தில் பங்கு கொண்டதும் இவருடைய ஆகச்சிறந்த ஆளுமை குறித்து நாம் அறிந்துகொள்ளத் தக்கதாகும்.
DSC_5842

Tuesday, March 22, 2016

தேவ வாத்தியம்!



பவள சங்கரி
‘தேவ வாத்தியம்’ என்பது எது? ஏன் அது அப்படி அழைக்கப்படுகிறது?
images (1)
‘கடம்’ என்ற மண்பானை போன்ற தோற்றமுடைய அந்த எளிமையான இசைக்கருவிதான் ‘தேவ வாத்தியம்’ என்று அழைக்கப்படுகிறது. இது கர்நாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று. தோற்றத்தில் சாதாரண மண் பானை போலவே இருந்தாலும் இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கடம் தயாரிப்பதற்கு மூன்றுவிதமான மண் தேவை. வைகையாற்று வண்டல், கண்மாயில் பதிந்து கிடக்கும் களிமண் மற்றும் மணல். ஒரு மாட்டு வண்டி வண்டலில் 40 கடம் செய்யலாமாம். சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற ‘குடமுழவு’ எனும் இசைக்கருவியே நாளடைவில் மருவி ‘கடம்’ என்று ஆனதாகவும் சொல்கிறார்கள்.

Friday, March 18, 2016

தமிழர் தம் தெய்வ வழிபாடுகளும் குறியீடுகளும்





பவள சங்கரி


தமிழர் தம் தெய்வ வழிபாடுகளும் குறியீடுகளும்

ஆன்மீக நாடான நம் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்களும், வழிபாடுகளும் இருந்தாலும், குல தெய்வ வழிபாடு என்பது அந்தந்த குடும்பங்களில் உள்ள நபர்களுக்கான தனிப்பட்டதொரு தெய்வம் என்பதால் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.குலம்' என்றால் "குடும்ப பாரம்பரியம்' என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குல தெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோள். ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்று வழிவழியாக வழங்கப்படும் பழமொழியே இதற்குச் சான்றாகும். அதாவது  ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமெனில் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் தமிழ் நாட்டில் குல தெய்வ வழிபாடு என்பது நாகரிக மாந்தர்கள் மத்தியில் அருகி வந்தாலும் சிற்றூர்கள் மற்றும் கிராமப்புறங்கள், பாரம்பரியக்  குடும்பங்கள் போன்ற இடங்களில் இன்றளவிலும் தவறாமல் ஐதீக முறைப்படி வழிபாடுகள் நடைபெறுவதைக் காணமுடிகிறது. சிலர் குல தெய்வ வழிபாட்டை சிறு தெய்வ வழிபாடு என்று புறந்தள்ளுபவர்களையும் காண முடிகிறது.

Tuesday, March 8, 2016

சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்




சுவாமி விவேகானந்தரின் பார்வையில் பெண்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படத் தொடங்கிய இந்து மத மறுமலர்ச்சியில் உருவான உன்னதமான பல ஞானிகளில் நம் சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மகான். பெண்களை துறவு வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் மாய சக்தியாகக் காணும் பல துறவிகளுக்கிடையே சுவாமி விவேகானந்தர், மிக வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தார். சீதை மற்றும் சாவித்திரி. போன்ற கதாப்பாத்திரங்களை ,பெண்களைப் பற்றிய தம் நோக்கிற்கு முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். இந்தியப் பெண்களின் தூய்மை, அன்பு, பக்தி போன்ற மேன்மையான குணநலன்களைப் பாராட்டியுள்ளார். இந்தியப் பெண்களின் பெருமை என்றும் அவர்தம் தாய்மையிலேயே பிரகாசிக்கிறது என்கிறார். பெண்கள் சுதந்திரமும் வளர்ச்சியும் பெறுவதற்கு அடிப்படையான கல்வியைப் பெறுவதன் மூலமாக தங்களுக்குத் தேவைப்படும் சீர்திருத்தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வார்கள். வெறும் புத்தகப் படிப்பை அளிப்பதைக் காட்டிலும், பெண்களுக்கு மதத் தத்துவங்கள், கலை, சுகாதாரம், ஆரோக்கியம், குடும்ப பராமரிப்பு, சமையல், தையல், அறிவியல் போன்ற அனுபவப் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும் என்கிறார். இளம் வயது திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதே இந்திய நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்.

1920-இல் மகாகவி பாரதியார் , ‘மாதர்களைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அபிப்ராயம் ’ என்ற கட்டுரையை எழுதினார். அதில் அவர், பெண்கள் நிலை, பெண் விடுதலை பற்றிய தமது கருத்துகளை தமக்கே உரிய பாணியில் ஆராய்ந்திருக்கிறார். கடைசியில் அவர் அந்தக் கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்தது குறிப்பிடத்தக்கது:

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...