காற்று வெளி இதழ் வெளியீடு
பவள சங்கரி
வரைவிலக்கணம் வகுப்பதில் வல்லவர் அந்த விஞ்ஞானி. உலகில் உள்ள எந்தப் பொருளாயினும் அதற்கு அழகான வரைவிலக்கணம் கொடுத்து விடுவார்.
ஒரு முறை ஒரு பெருங்கூட்டத்தில் உரையாற்ற அவரை அழைத்திருந்தனர்.
அங்கு
ஒவ்வொருவரும் ஒரு பொருளைக் காட்டி அதன் வரைவிலக்கணம் கேட்டுக்
கொண்டிருந்தனர். அவரும் தயங்காமல் எல்லோருக்கும் விடை பகர்ந்துக்
கொண்டிருந்தார்.