Thursday, February 13, 2014

கவிக்குயிலின் கவி முகம்! (2) - சரோஜினி நாயுடு


பவள சங்கரி

இன்று கவிக்குயிலின் 135 வது பிறந்த தினம்! 

சரோஜினி நாயுடு (1879 – 1949) இந்திய ஆங்கிலக் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், பெண்ணுரிமை, அரசியல் ஆர்வலர், சொற்பொழிவாளர், மற்றும் நிர்வாகி இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர், மற்றும் முதல் இந்திய மாநில கவர்னராக இருந்தவர். இளமையில் எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு பெண்ணாகவும் இருந்திருக்கிறார்.

மெல்லிய இதயமும்பளிச்சென்ற கருத்துகளும் கொண்ட ஆங்கில கலாச்சாரமும்,இந்தியக் கலாச்சாரமும் ஒருங்கே அமையப்பெற்ற கவிக்குயிலின் பாடல்களில்,டெனிசன்ஷெல்லி மற்றும் எலிசபெத் பேரட் பிரௌனிங் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் தாக்கமும் இருந்தது. மிகுந்த கற்பனை வளமும்தாள லயமும்இசை வடிவமும்காதல்பிரிவுஏக்கம்இறப்பு,வாழ்வின் அற்புதங்கள் என்று அனைத்து ஆழ்மன உணர்வுகளையும் அழகு கவிதைகளாக்கும் வல்லமை பெற்றவரானார்.இந்திய அரசும் கேசரி ஹிந்த்’ என்னும் சிறப்பு வாய்ந்த பதக்கத்தைக் கொடுத்து அம்மையாரைக் கௌரவித்தது.

Corn Grinders

O little mouse, why dost thou cry
While merry stars laugh in the sky?


Alas! alas! my lord is dead!
Ah, who will ease my bitter pain?
He went to seek a millet-grain
In the rich farmer's granary shed;
They caught him in a baited snare,
And slew my lover unaware:
Alas! alas! my lord is dead.

Monday, February 10, 2014

மன அமைதிக்கு வித்து! – வேறுபாடற்ற மனித தத்துவம்



பவள சங்கரி
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சிக் கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதைமை யற்றிடும் காணீர்!
- பாரதியார்
இந்தக் கட்டுரையில் எங்கேனும் ஆணாதிக்கம், அல்லது பெண்ணியம் என்பதன் சாயல் துளியும் தென்படக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வேண்டி, போராட்டங்கள் நூற்றாண்டுகளாக நடந்துகொண்டிருந்தாலும், இன்று பெண்கள் தடம் பதிக்காதத் துறையே இல்லை என்னும் நிலை இருக்கும் ஒரு காலகட்டத்திலும் பெண்களின் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. இங்கு பெண்களின் போராட்டம் என்று நான் குறிப்பிடும்போது சில வேளைகளில் பெண்களே பெண்களுக்கு எதிரியாகவும், தமக்குத்தாமே தேவையற்ற ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்துக்கொள்பவளாக இருப்பதையும் சேர்த்தே குறிப்பிட வேண்டியுள்ளது. இந்த எல்லைக்கோடு என்று நான் குறிப்பிடுவது நம்முடைய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கக்கூடிய எல்லைக்கோடுகளைத்தான்!

Wednesday, February 5, 2014

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்!


அன்பு நண்பர்களே,

இந்த நூலை வெளியிட்டுள்ள பழனியப்பா பதிப்பகத்தாருக்கு மனமார்ந்த நன்றி.

​​ 
Displaying img015.jpg
  Displaying img016.jpg
​​
​​
                
என்னுரை

இந்த வாழ்க்கையில் நாம் அறிந்திராத ஏதேதோ இருக்கிறது. தேடுதலும் இருந்துகொண்டேதான் இருக்கிறது . அனைத்திலும் முதன்மையாக இருப்பதுஅன்புஎன்பதாகவே இருக்கிறது. இந்த நவீன அவசர உலகத்தில் அந்த அன்பை வெளிப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோகூட நேரமில்லாமல் போகிறது. அப்படியிருக்கும்போது, நல்ல ஆக்கங்களை ஆழ்ந்து படிப்பது என்பது ஆகாத காரியமாக இருக்கிறது. ஆனாலும் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலை சேதமில்லாமல் எதிர்கொள்வதற்கு சிலவற்றை அறிந்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறதுஆசையைக் கட்டுப்படுத்தினால்தான் நிம்மதியாக வாழ முடியும் என்கிறார் புத்தர் . அனைத்திற்கும் ஆசைப்படு என்கிறார்கள் சிலர். இதில் எதைக்கொள்வது, எதை விடுவது? மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறதுதன்னம்பிக்கை மட்டுமே நல்ல பாதையை அமைத்து கொடுக்கக்கூடியது. இந்த நம்பிக்கையைப் பெறக்கூடிய பல வழிகளில் ஒன்று இது போன்ற ஆக்கங்களை வாசிப்பது. நம்முடைய முன்னோர்கள் இந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு பல உதாரணங்களை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பீர்பால் கதைகள். ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த படைப்புகள் அவை.

Tuesday, February 4, 2014

உலக புற்று நோய் தினம்



பவள சங்கரி


”புற்று நோய் என்பது வெறும் ஒரு வார்த்தைதான். வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல” - ஜான் டைமண்ட்

இன்று உலக புற்று நோய் தினம். புற்று நோய்களில், இரத்தப்புற்று நோய் (லுக்கிமியா) சிறுநீரகப் புற்று நோய், மார்பகப் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கருப்பை புற்று நோய், தோல் புற்று நோய் போன்ற பல வகைப்பட்ட புற்று நோய்கள் உள்ளன. உடலின் செயல்பாடுகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் செல்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியே புற்று நோயாகும்.

Monday, February 3, 2014

இதுதானா ஆப்புங்கறது..?


பவள சங்கரி


காட்சி - 1

ஹலோ, ஹலோ.. ஏனுங்க எவ்ளோ நேரமா போன் அடிக்குதே. அப்புடி என்னதான் செய்வீங்க. போன் அடிச்சா உடனே எடுக்கணும்கறது குட் மேனர்ஸ் . இதுகூட தெரியாதாக்கும்..

ஆமாம்மா எங்களுக்கு வேற பொழப்பே இல்லை பாரு.  போனையே பாத்துக்கிட்டு எப்ப அடிக்கும்னு உக்கார்ந்திருக்கோமாக்கும்.  மனுசன் காலையிலருந்து, பேல் போட்றதுக்கு மாடா உழைச்சுக்கிட்டிருந்தா உனக்கு கிண்டலா இருக்குது. பேசமாட்ட பின்ன. சுகமா வீட்டுல ஃபேனுக்கடிய உக்காந்துக்கிட்டு, ஹாயா வேலைக்காரிகிட்ட அதிகாரம் பண்ணிக்கிட்டு, நேரத்துக்கு ஜூஸ் குடிச்சு உடம்பையும் பாத்துக்கிட்டு மேடம் சுகமா இருக்கணும்னா நாங்க இங்க இப்புடி கடந்து உழைச்சாத்தானே ஆச்சு. சரி வேலை கடக்குது. என்னத்துக்கு போன் பண்ணின அதச்சொல்லு.

Thursday, January 30, 2014

பதின்மப் பருவத்தின் வாசலிலே

மதுமிதா அவர்கள் தொகுத்து வழங்கி, சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள, ‘பருவம்’ என்ற நூலில் 25 எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்புகள், ’உள்நின்று ஒளிரும் நுண்ணிய உணர்வுக் கண்ணிகள்’ என்ற தலைப்பிட்ட அழகான முன்னுரையுடன் வெளிவந்திருக்கிறது. இதில் இரண்டாவதாக வெளியாகியிருக்கும் என் கட்டுரை இது. தொகுப்பில் தேர்ந்தெடுத்த அன்புத் தோழி மதுமிதாவிற்கும், வெளியிட்டுள்ள சந்தியா பதிப்பகத்தாருக்கும் நன்றி. 




பதின்மப் பருவத்தின் வாசலில்!

பவள சங்கரி

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகைப் பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலைப் போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூச் சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)

Monday, January 27, 2014

கோவையில் கோலாகலத் தமிழ்த் திருவிழா (2)


பவள சங்கரி

தாயகம் கடந்த தமிழ்



சென்ற வாரம் (ஜனவரி 20 - 22, 2014) இந்தியாவில், கோயம்புத்தூர் மாநகரில், ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்என்ற அரசு மற்றும் அரசியல் அமைப்புகள் சாராத, தன்னார்வத் தமிழர்கள் மூலம் கோவையில் சென்ற ஆண்டு துவக்கப்பட்டதமிழ்ப் பண்பாட்டு மையம்என்ற அமைப்பின் மூலமாக உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு வழமையான அலங்காரங்களுடன் நடந்தேறியதுபுலம்பெயர் தமிழ் அறிஞர்கள் பலர் நம் தாய்மொழியைக் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தங்கள் உரை மற்றும் கட்டுரைகளை முன் வைத்தார்கள். தொன்மையும், செழுமையும் நிறைந்த  நம் தமிழ் மொழி காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறதே என்ற துக்கம் எழாமல் இல்லை.  12 நாடுகளிலிருந்து, 35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு, அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்தக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருபவருமான திரு சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் .. பொன்னுசாமி ஆகியோர் அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தினார். முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் வாழ்த்துரை வழங்கினார்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...