Monday, June 23, 2014

கவியரசு கண்ணதாசன்


இன்று கவியரசரின் 88 வது பிறந்த தினம். ”நான் நிரந்தரமானவன். எனக்கு அழிவென்பதில்லை” என்று அவரே கூறியுள்ளது போல இன்றும் நம்முடன் தம் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.


கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை இது. அவர் உடல் நலமின்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது,  அவரை நலம் விசாரிக்க  அமெரிக்க வாழ் தமிழர்கள் வந்திருந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத் தெரி்யாது என்பதை அறிந்த கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அக்கவிதையே கவியரசர் எழுதிய கடைசி கவிதையும் என்கிறார்கள்.  இதுதான் அந்தக் கவிதை.



Sunday, June 22, 2014

கவிக்குயில் சரோஜினி நாயுடு - உலக அமைதிக்கு ஒரு வணக்கம்

பவள சங்கரி



புவியெங்கும்  நிறைந்திருப்பது அச்சமும் வெறுப்புமாம் செப்புகின்றனர் ஆடவர்,
கனிந்த வாழ்வின் அறுவடைக் களத்தில் காத்திருப்பதோ
இடைவிடாத விதியின் அமைதியில்லாத அரிவாள்.

ஆயினும், இனிய ஆன்மாவாயிற்றே நான், ஆனந்தமே என் பிறப்பு,
சோளக்கதிரேறும் மேற்கூரையிலிருந்து நான் காண்பதோ
 உன் விடிவெள்ளியின்  பொன் மாங்குயில்  காட்சியன்றோ!

Saturday, June 21, 2014

பொன் சிறகு

பவள சங்கரி






பெரிய பெரிய ஆசைகளைப் 
பக்குவமாய் பறைசாற்றுவதில் 
பாதகமொன்றுமில்லை.

பாடுபொருட்கள் பரவசமாய்
பரிந்துரைத்தால் பாவலனுக்கு
பரமானந்தம்தான்!

Thursday, June 19, 2014

யாருக்கு சொந்தம்?


இன்னொரு ஜென் கதை - யாருக்கு சொந்தம்?


ஒரு  போர் வீரர் இருந்தார். பெரும் வீரரான அவர் வயதானவர். பல போர்க்களம் பார்த்தவர் என்றாலும் அப்போது அதையெல்லாம் விட்டு  ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.வயதானவர் என்றாலும்  உடல் வலிமையும் மனோபலமும்  சற்றும் குறையாத அவருக்கு எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் வல்லமை இருந்தது.

 அந்த கிராமத்திற்கு ஒரு இளம் வீரனொருவன் வந்தான். எப்படியும் இந்த முதிய போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் துடித்தான். அவனுக்கு உடல் பலத்துடன் எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் துணிவும் இருந்தது. தன் குதர்க்கமான பேச்சால் எதிராளியை தூண்டிவிட்டு, முதல் தாக்குதலுக்காகக் காத்திருப்பான். அதில் எளிதாக எதிராளியின் பலவீனத்தை கண்டுபிடித்துவிடுவான். முதல் தாக்குதலே மிக பலமானதாக்கி எடுத்த எடுப்பில் எதிராளியை வீழ்த்துவதுதான் அவன் சண்டை யுத்தி. இப்படி அவனால் வீழ்த்தப்பட்ட வீரர்கள் எண்ணற்றவர்கள்.

Saturday, June 14, 2014

தந்தை ஒரு சீனத்துச் சுவர்!

பவள சங்கரி





தந்தை ஒரு சீனத்துச் சுவர்
வெறும் கற்களாலான சுவரல்ல
இரும்புக் கோட்டை அமைத்த சுவர்
வீசும் புயலும் தகிக்கும் தீக்கனலும்
அண்டவிடாது  அடைகாப்பவன்
குருதியை வியர்வையாக்கிப் பாசமாய்
வளர்ப்பவன். 

Tuesday, June 10, 2014

ஓடும், செம்பொனு மொக்கவே


பவள சங்கரி



சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
(பெரிய புராணம்) - 143

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்  
  ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
         கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
          வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

     குறைவதும் மிகுவதுமில்லாத என்றும் நிலைத்த செல்வத்தை உடையவர்கள், மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள்; 

இறைவனை மனத்திலே கூட்டி வைக்கும்  அன்பு மேலீட்டினால் அவனை வழிபடும் பிறப்பு ஒன்றேயன்றி, நிலையில்லாத செல்வத்தையும், சொர்கத்தையும் கூட  விரும்பாத வன்மையுடையார். அதாவது தெய்வத் தன்மையாய் என்றும் இறவாத இன்ப அன்பு நிலையுடையவர்கள். பிச்சைபுக்கு உண்ணும் நிலையையும் , செம்பொன், முத்து, வைரம், வைடூரியம் என எத்தகைய செல்வமாயினும் அதனை விரும்பாது, அடியவர்கள் இவ்விரண்டு நிலையிலும் மனம் மாறாது ஒன்று போலவே தம்பணி செய்து நிற்பர்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...