Tuesday, December 31, 2013

இனிய புத்தாண்டு 2014!!!



அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!!

அன்புடன்
பவள சங்கரி

Tuesday, December 24, 2013

பாசத்தின் விலை




பவள சங்கரி


ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்


நண்பன் ஆராவமுதன் தன் இனிய குரலில் பதிவு செய்து அனுப்பிய பட்டினத்தடிகளின் பாடலை மெய்மறந்து, உடன் முணுமுணுத்துக்கொண்டே  ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சபேசன்.

ஏண்ணா.. ஏண்ணா, நான் கத்தறது காதில் விழலையா.. அதுசரி இவ்ளோ சத்தமா பாட்டை வச்சிண்டிருந்தா எப்படி அடுத்தவா பேசறது காதுல விழும்லேப்டாப்பில் கனெக்ட் செய்து வைத்திருந்த ஸ்பீக்கரின் ஒலி அளவைக் குறைத்த மறுகணம், கனவுலகிலிருந்து மீண்டவராக சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தவர்,

Sunday, December 22, 2013

Feather, Oh Feathers!!


Pavala Sankari
s1476587
Feathers, cute little peacock feathers
Bright and beautiful with multicolours
Brushing smoothly with rosy petals
Transcends through the flowery heart
Brings the cool breeze to float within
Carrys angel’s blessings to have light heart!

Tuesday, December 17, 2013

கர்ம வீரர் காமராசர்


பவள சங்கரி

குட்டி ஜப்பான்என்று அழைக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலை நகரமான சிவகாசிக்கு ஒரு உறவினரைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்..  பொதுவாக பயணம் என்றாலே எனக்கு மிகவும் பிடித்த விசயம். அதிலும் மழை வரும் முன்பு, லேசான மண் மணத்துடன், மெல்லிய தென்றல் குளிர் காற்றாய் வீச, உல்லாச உந்தின் கதவின் கண்ணாடிகளை இறக்கிவிட்டு அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு வாலியின் கவிதைகள் தேனிசையாய் முழங்க.. வேறு என்ன வேண்டும்? மதுரை தாண்டி விருதுநகரைத் தொட்டவுடன்அதுவரை வாய் மூடி மௌனமாக சாரதியாக வந்தவர், ஒரு மெல்லிய சிலிர்ப்புடன்,  ‘அட, விருதுநகர், நம்ம காமராசர் ஐயாவோட ஊரு.. புண்ணிய பூமிஎன்று சொல்லிவிட்டு அப்படியே நினைவில் ஆழ்ந்துவிட்டார். மெல்ல பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..  அதாங்க எங்க ஊட்டூக்காரவிக, திருநாவுக்கரசு அவிங்கதான்....

Sunday, December 15, 2013

சொந்தச் சிறை


பவள சங்கரி

இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க!
“இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே.. எத்தன பாடுபடுத்திச்சு என்னய.. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி.. கை குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும் போது தான தெரியும் இந்த ராசுவோட அருமை. நல்லா இருக்கும்போது என்னைய கண்டுக்காம இன்னைக்கு என்னை காப்பாத்துறதுக்கு மூச்சு முட்ட உசிர கையில புடிச்சிக்கிட்டு ஓடுறியே.. உனக்கு எம்மேல பாசம் இல்லாமயா இப்புடி ஒரு காரியத்தை பன்னற.. நீ நெம்ப நல்லவிகதான் மாமா.. ஆனா.. “
உடலெல்லாம் உணர்வற்று மரத்துப்போன நிலையில் மனம் மட்டும் அரை மயக்கத்தில் விழித்த நிலையில் எதை எதையோ பிதற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது, ராசுமணிக்கு. கழிப்பறை, மின்சார வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கேத் திண்டாடும் இந்த குக்கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்று போராடி சாதித்து, அதற்காகத் தம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவன் வீரய்யன். ஆசை, ஆசையாக மாமன் மகளை மணந்துகொண்டு அவளையும் சீமாட்டியாக வாழ வைக்க வேண்டும் என்றுதான் போராடுகிறான். எல்லாம் என்ன சினிமா கதையா.. ஒரே பாடலில் நினைத்ததெல்லாம் நடந்து முடிந்து ஊரே சுவர்க்கபுரியாக மாறுவதற்கு. இந்த ஆரம்பப் பள்ளியை ஊரில் தொடங்குவதற்குள் அவன் பட்டபாடு சொல்லி முடியாது. பதினான்கு கிலோமீட்டர் அன்றாடம் நடந்து சென்று தான் படித்துவிட்டு வந்து பட்டபாடெல்லாம் இப்போதைய குழந்தைகளுக்கு இருக்கக் கூடாது, அவர்களும் நாலெழுத்துப் படித்து நன்றாக இருக்க வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம் இன்று வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக ஒத்தாசையாக இல்லாவிட்டாலும் உபத்திரவமாக இல்லாமல் இருக்கச் சொல்லி, காலில் விழுந்து கும்பிட்டுக்கூட கேட்டாகிவிட்டது. ராசுவும் புரிஞ்சிக்கிற வழியைக் காணோம். அன்றாடம் சண்டை, சந்தேகம், குதர்க்கமான பேச்சு.. சே.. வாழ்க்கையே சலிப்பாகத்தான் போகிறது, வீராவிற்கு. வயிற்றில் குழந்தையை சுமக்கும் ஒரு தாய் போலவா நடந்துகொள்கிறாள். இன்னும் சின்னக் குழந்தையாட்டம் தொட்டதெற்கெல்லாம் அடம் பிடித்துக்கொண்டு, சொல்வதையும் புரிந்து கொள்ளாமல் கேட்பார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால் ஒரு மனிதன் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். இதோ, வயிற்றில் எட்டு மாத குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் இப்படி ஒரு சாதாரண விசயத்திற்காக சண்டை போட்டு இன்று கீழே விழுந்து படாத இடத்தில் ஏதும் அடிபட்டு விட்டதோ என்னமோ தெரியவில்லை. திடீரென்று இரத்தப் போக்கு ஆரம்பித்துவிட்டது. மயங்கி விழுந்த ராசுவிற்கு தண்ணீர் தெளித்தும் தெளியவே இல்லை. பதறியடித்துக்கொண்டு ஊரில் இருக்கும் இரண்டே இரண்டு குதிரை வண்டியும் , மாட்டு வண்டிகளும், பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு சென்றுவிட்டது. மினி பஸ் காலையில் 11 மணிக்கு மட்டுமே ஒரே ஒரு முறை வரும். இரவு 8 மணிதான் ஆகிறது, தெருவே மயான அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது. இந்த நேரத்தில் செய்வதறியாது, யோசிக்கவும் நேரமில்லாமல், அன்பு மனைவியை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு 14 கி.மீ. தள்ளி இருக்கிற மகப்பேறு மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறான் இந்த வீரா, கூடவே மனப்பாரத்தையும் சுமந்தபடி.

Tuesday, December 10, 2013

பாரதி கண்ட கனவும் மக்கள் தீர்ப்பும்


பவள சங்கரி

மகாகவி பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு சுதந்திரம் பெறும் முன்னரே ஆனந்தமாக சுதந்திரப்பள்ளு பாடி கனவுலகில் குளிர்ந்தவன் பாரதி!! சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று பாரதி கண்ட கனவும் அந்த ஆசையை அவர் பலவிதங்களில் வடிவமைத்துக் காட்டிய விதமும் ஒவ்வொரு இந்தியனின் உணர்விலும் ஊடுறுவிக் கிடக்கும் ஒன்றுதான் என்றாலும் அவைகள் அனைத்தும் இன்று செயல்படாமல் ஏட்டளவிலேயே நின்று போய்க்கிடப்பதற்கான ஆதாரங்களும் பல. பாரதி கண்ட கனவுகளில் பல இன்றும் கனவுகளாகவே உள்ளதுதான் வேதனைக்குரிய விசயம். பாரதி கண்ட யுகப் புரட்சியும், உருசியப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி பற்றி பாடிவைத்துப்போன அனைத்தும் இன்றும் நினைவுகூரத்தக்கது!

Saturday, December 7, 2013

இருண்ட இதயம்



பவள சங்கரி


"விடுங்க .... ஆரும் பார்க்கப் போயினம்.. “ உதடுகள் மட்டும் ஏதோ சொல்வதை உள்ளம் மறுத்து அதுவே தொடர வேண்டும் என்று ஏங்கும் அதிசயத்தை உணர்ந்தாள் தமிழினி.  

“தமிழினி, எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறாய்?.  அதுசரி, காயம் ஏதும் பட்டதோ? ”  கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தபோது, அவன் வார்த்தைகளில் இருந்த அதீத அன்பை உணரும் நேரம் உள்ளமெல்லாம் பூவாய் பூத்தது!

“அதெல்லாம் ஒன்னுமில்லை, விடுங்க..  நான் போய்விட்டு வாறன்” 

“என்ன தமிழினி, உன்னுடைய உடம்பு இப்படி நடுங்குது..?”

“உங்கட நாடி மட்டும் என்னவாம்? இப்படி துடிக்குது?” கடைக்கண் பார்வையினால் சொக்கி விழச் செய்தாள் தமிழவனை!. 

“தமிழினி, நாளை நான் வாறேன் அங்கே” அவன் கண்களில் பொங்கிய ஆர்வம் அவளையும் தொற்றிக்கொண்டது.

“இங்கே ஒரே ஆட்கள்... கதைக்கவும் ஏலாது.  பாலன் அண்ணைக்கு சாடையாக விளங்குது போலத் தெரியுது..”

“ஓமோம்.. என்னட்டையும் கேட்டவ.. நான்.. சீ.. இல்லை எண்டு சொல்லிப் போட்டன்”

”ம்ம்... என்ன.. அப்படி ஒண்டுமில்லையோ?” லேசான செல்லக்கோபம்!

“அப்ப என்ன...  நடுத்தெருவுல நிண்டு சத்தம் போட்டு உண்மையச் சொல்லட்டோ?” சிரித்தான் குறும்பாக.

அவள் அவசரமாக மறுத்துத் தலையாட்டினாள். 

Friday, December 6, 2013

பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்



பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்

பவள சங்கரி திருநாவுக்கரசு

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.com/2013/12/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=Ed0QwAiBgn0


நம் பழம்பெரும் பாரத நாட்டில், ‘மாதவம் செய்த தென் திசை’ என்று சமயப் பெரியோர்களால்  பாராட்டிப் புகழப்பெறும் சிறப்புடையது நம் தமிழ்நாடு. தொன்மைமிக்க நம் தமிழ்நாடு பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தேக் கொண்டதாயினும், சிறந்த கட்டிடக்கலை அமைப்புடன், சீரியச் சிற்பச் செல்வங்களையும் பெற்றுள்ள கோவில்களாலேயே நம் தமிழ்நாடு தனிச் சிறப்பெய்தி வானளவு உயர்ந்து நிற்கிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில்கள் நம் தமிழ் நாட்டில் உள்ளவை எண்ணிலடங்கா.அந்த வகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பாரியூரில் அமைந்துள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் கட்டப்பட்ட காலத்தைக் கண்டறிய சான்றேதும் கிட்டவில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் பல நூறாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும், பிற்காலங்களில் நல்ல முறையில் கட்டப்பட்டுள்ளது. 

இத்திருக்கோவிலின் இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால், நாற்புறமும் நெடிதுயர்ந்த மதிற்சுவர்களின் நடுவே பெரிய மைதானம் போன்ற இடம் இருக்கிறது. இதன் மையப் பகுதியில் காளிதேவியின் கற்கோவில் மண்டபம் அமைந்துள்ளது; இதன் உள்ளே பளிச்சென்ற பளிங்குக் கற்காளால் ஆன சுற்றுச் சுவர்களின் இடையில் அன்பே உருவான அன்னை, உருத்திர கோலத்தில், சிரசில் உருத்திரனை தாங்கியுள்ளக் கோலமாக, சிரசில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கொண்டத்துக் காளியின் திரு மேனி உருவச்சிலை, அருள் வடிவாக கொலுவிருக்கும் அற்புதக் காட்சி.  அம்மன் இங்கு, ஐயன் உருத்திரனின் திருமுகத்தைத்தம் சிரசில் தாங்கி, உருத்திர காளியாகக் காட்சியளிப்பதைக் காணலாம். 

Friendship Forever!



 Pavala Sankari



Words could never tell you
How fruitful friendship always be,
Just little words that come out
That are heavenly meant
That maketh the heart smile
That maketh the life worthwhile!

Brushing up the tears as well as
Picking up from the pool of confusion
Sinking in sadness avoided by consoling
Mending up the broken heart with feather
Blowing out the heartbreak away and
Turning out the world upside and around!!


Even though the past is past untold
Future will be fantastic humanity
Even though not able to keep the
Feet from stumbling could get a hand to
Grasp and save from not to fall deep
When in need of care warm hands spread

Decision making may depends
Encouraging ever supports
Boundaries never be determined
Could give the room to grow by himself!
And accept him as he is himself!
Could pick up the pieces to put back in their own!
Glad and sad times all passes through easily!


Friend is like a halcyon with the power to calm winds of the sea
Friend is like an owl who is wise and beautiful
Friend is like a flower who is soft and silky
Friend is like an angel of love who is in disguise
Friend is like a heart which bears everything
Friend is like a heaven where you can rest peacefully!!!



Thanks : Vallamai

Wednesday, December 4, 2013

காளான் பூத்த கல்மரம்




பவள சங்கரி

என்ன பெயர் இதற்கு?
எத்தனை யுகங்கள் தொடர்கிறது இது?
எவ்வளவு யுகங்களாகக் கூடிக்கொண்டிருக்கிறது?
அன்பு ஆயுளைக்கூட்டும் அருமருந்தாமே?
முந்து கேம்பிரிய ஊழியில்  மெல்ல உயிர்த்ததுவோ?
உயிரற்ற உறழாய்த் தோன்றிப்பின் உயிர்க்கலனாய்
உருவெடுத்துப் பல்கிப்பெருகிய காலந்தொட்டு
 கேம்பிரியக்காலத்திலும் தொடர்ந்ததுவோ?

Sunday, December 1, 2013

You Made It!!!


Pavala Sankari


Becareful with my heart

as it pains much due 

wired with confusions
win-now from partition thorns


Neednot be worried
Of yours being in a pool
Full of lilly blossoms
Embosomed with Cool breeze

Wednesday, November 27, 2013

Awake! Awake soon!

Pavala Sankari


Awake! O Awake Soon, Awesome Amul Baby!
And let me surrender to thee myself
And let me pray for you Heaven's Blessings,
And let me find you peace on earth,
And let me give you my heart of love
And let me give you my lap to rest in comfort,
And let me feed you with my honey bio,
And let me make you fly in the happy air,
And let me carry you to throngs of birds resort

LONG LIVE MY CUTE BABY! 
LIVE LONG OH SWEETIE PIE!!!

Pavala

Tuesday, November 26, 2013

நம்ப முடிகிறதா உங்களால்?





புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டிப் பெண் ஒரு சாதனையாளர் தெரியுமா? மரணத்தை வென்ற மகாசக்தி என்று அந்த வயதிலேயே பாராட்டைப் பெற்று தினசரிகளில் தலைப்புச் செய்தியானவள்..  இவளோட கதையைக் கேளுங்களேன்..

இவளோட தாத்தா சேலத்தில் ஒரு பிரபலமான வக்கீல். கணேச சங்கர் என்று சொன்னால் இன்றும் கூட பழைய தலைமுறையினருக்கு தெரிகிறது.  உயர்நீதி மன்ற கிரிமினல் வழக்கறிஞர் என்பதால், எப்பொழுதும் வீட்டில் தாத்தா இருக்கும் நேரம் யாராவது வருவதும், போவதுமாகத்தான் இருப்பார்கள். பெரிய குடும்பம்.  6 மகன்கள், 3 மகள், இரண்டு மனைவிகள் (தாத்தாவின் முதல் மனைவி 9 குழந்தைகளை பெற்றுவிட்டு, கேன்சர் நோய் வந்து இறந்துவிட, இரண்டாவதாக, தாத்தா தானே விரும்பி மணம் முடித்துக் கொண்ட இரண்டாவது பாட்டியின் கதை மிகவும் சுவையானது.. பின் ஒரு நாளில் சொல்கிறேன். தான் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் இந்த 9 குழந்தைகளை தன் குழந்தைகளாக கண்ணும், கருத்துமாக இறுதி வரை காத்து வந்த உத்தமி)

Monday, November 25, 2013

கரிக்கட்டை


கரிக்கட்டை

பவள சங்கரி

மர கரி, கருமையான, நுண் துளைகள் கொண்ட, எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்ட ஒரு பொருள். இது நீரில் மிதக்கும், வெப்பம் மற்றும் மின்சாரத்தின் மோசமான கடத்தி
நுண்துகள்களுடைய இந்த மர கரி அதன் நுண்ணிய மேற்பரப்பில் திரவங்கள் மற்றும் வாயுக்களை உறிஞ்சிக் கொள்ள முடியும்

சரிகா, பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு வீட்டிற்கு பொடி நடையாக நடந்து வந்துகொண்டிருந்தாள். மனசெல்லாம் ஒரே பாரம் அழுத்தியபடி இருந்தது. ‘கரிக்கட்டைஎன்ற வார்த்தையை எத்தனை முறை, எத்தனை விதமான சூழ்நிலையில் கேட்டிருப்போம் என்று எண்ணிப்பார்க்கையில் அவளையறியாமல் உடல் ஒரு முறை குலுங்கி அடங்கியது. தெருவில் வண்டிகளின் ஓசையெல்லாம் நாராசமாக ஒலித்தது.

சனியனே, இந்த கரிக்கட்டை மூஞ்சியை வச்சுக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என் உயிரை வாங்குவியோ..  வரவனெல்லாம் மூஞ்சியைப் பார்த்தவுடனே, ஒன்னும் சொல்லாம திருப்பிக்கிட்டு போறானுவ.. எதையாச்சும் கிரீமைப் பூசி கொஞ்சம் பளபளப்பானாச்சும் காட்டுடின்னு சொன்னா பாவி மக, அதையும் கேக்க மாட்றா.. கருகிப்போன எண்ணெய்ச் சட்டி கணக்கா மூஞ்சியை வச்சுக்கிட்டா எவன் திரும்பிப் பார்ப்பான்.. எப்பப் பாத்தாலும் எண்ணெய் வழியற மூஞ்சியோட, தலையிலயும் எண்ணெய் வழிய நின்னா எனக்கே கோவமால்ல வருது. உன் வயசு புள்ளைக எல்லாம் எப்புடி அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு மினுக்கிட்டு திரியுதுங்க.. எவ்ளோ சொன்னாலும் உனக்கு மட்டும் ஏன் இந்த மர மண்டையில ஏற மாட்டீங்குது

Sunday, November 24, 2013

Destination



DESTINATION





why do I adore you?
Because--
Endless travel of mind
To be reached - the destination
It can never wander hopelessly.

Because -
Almighty knows - my
urgent requirement - worth
To be settled over - in the
Wisdom of Destiny!

AWAKE! O AWAKE SOON ! AWESOME AMUL BABY!


PAVALA SANKARI


Awake! O Awake Soon, Awesome  Amul Baby!
And let me surrender to thee myself
And let me pray for you Heaven's Blessings,
And let me find you peace on earth,
And let me give you my heart of love
And let me give you my lap to rest in comfort,
And let me feed you with my honey bio,
And let me make you fly in the happy air,
And let me carry you to throngs of birds resort
LONG LIVE MY CUTE BABY! LIVE LONG OH SWEETIE PIE!!!


Monday, November 18, 2013

நெல்லுக்குப் பாயுற தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும்!


பவள சங்கரி


நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!

காட்சி  : 1

ஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா..

ஹலோ..  என்னம்மா.. நான் டிராஃபிக்ல இருக்கேன்.. ஒன்னும் கேக்கலை

ஹலோ.. ஏனுங்க பக்கத்துல யாரோ பேசுறது கேக்குது.. நீங்க என்னமோ வண்டீல போற மாதிரி சொல்றீங்க..

அதுவா.. வேற ஒன்னுமில்லம்மா. நானு சிக்னல்ல நிக்கிறேனா.. அங்க பக்கத்துல ஒருத்தர் போனில பேசிட்டிருக்கார்..

அப்படியா.. அப்ப சரி. வந்து, நான் எதுக்கு போன் பண்ணேன்னா.. ஏனுங்க... ஏனுங்க.. இருக்கீங்களா?

டொக் என்று போனை கட் பண்ணும் சத்தம் கேட்க,

ஏனுங்கண்ணா.. போனில அண்ணிங்களா.. இப்படி கலாய்க்கறீங்க பாவம். கடையில உக்காந்துக்கிட்டே டிராஃபிக்ல இருக்கேங்கறீங்க.. பாவங்ண்ணா அண்ணி..

Friday, November 15, 2013

பாட்டி சொன்ன கதைகள் 18




ஹாய் குட்டீஸ் நலமா?


‘தானத்திலே சிறந்தது கண் தானம்’. 


கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடாதவர்கள் இருக்க முடியாது. கொஞ்ச நேரம் கண்கள் கட்டப்படிருந்தால் நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம். இந்த உலகமே இருண்டதுபோல் எல்லாம் கருமையாக... அப்பப்பா..  இப்படியே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்றால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை இல்லையா? இப்படித்தான் நம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 இலட்சம் பேர் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். கருவிழி நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வை இழந்ததினால் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்போர் மட்டும் 10 இலட்சம் பேர். ஒரு ஆண்டிற்கு ஒரு இலட்சம் வரை கருவிழிகள் தேவைப்படுகிறது என்கிறது கணக்கெடுப்பு. ஆனால் நம் இந்தியாவில் கண் தானம் மூலம் கிடைப்பதென்னவோ 22,000 கருவிழிகள் மட்டுமே. இதற்கு நாம் என்ன செய்யலாம்? முதல்ல நம்ம கண்ணை பொன்னைவிட பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் கண் தானம் பற்றி எடுத்துச் சொல்லலாம். நம் குடும்பத்தில் இருப்பவர் அனைவரையும் கண் தானம் செய்யும்படி கேட்டுக்கொள்ளலாம்.  கண் தெரியாத நம் சக தோழர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்யலாம். 

சரி, யார் யார் கண் தானம் செய்ய முடியும் தெரியுமா?

Monday, November 11, 2013

அதிரடி தீபாவளி!


பவள சங்கரி


எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாய் நீஉனக்கு என்ன பிரச்சனை? என்னால் உனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? எப்படி உதவ முடியும் உனக்கு நான்? ஏன் என்னை இப்படி சுற்றிச் சுற்றி வருகிறாய்என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் மச்சி....?”

, இதுதான் உன்னோட பிரச்சனை மீத்து.. எதுக்கு இப்படி கேள்வி மேல கேள்வி கேட்கறே. அதுவும் மச்சினெல்லாம் சொல்றே ஃபிரண்ட்ஸ்குள்ளதான் இப்படியெல்லாம் பேசுவாங்க. இல்லேனா அக்கா ஹஸ்பண்டை மச்சான்னு சொல்லுவாங்க. நீ மும்பையிலருந்து வந்ததால உனக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்ல. அதான் இப்படி யாரை வேணுமின்னாலும் மச்சான்னு கூப்பிடுற..  இனிமே ஜாக்கிரதையா இரு, சந்தேகம்னா எங்க யார்கிட்டயாவது கேட்டுட்டு பிறகு இப்படியெல்லாம் பேசலாம்சரியா.. ”

ஏய் இவன பாருப்பா, டெய்லி இதே நேரத்துக்கு கரெக்டா வந்து நிக்கிறான்கரெக்டா ஆபீஸ் விட்டு வெளியே வர  நேரத்துக்கு வந்துடறான். எவ்வளவு திட்டினாலும் கோபமே வரமாட்டேங்குது.. என்ன மனுசன் இவன்.. சே.. முகத்தை வேற இப்படி பாவமா வச்சிக்கறான்.. எந்த கேள்வி கேட்டாலும்  தலையை குனிஞ்சிகிட்டு யூ ன்னு சொல்றான்நான் சரின்னு சொன்னா எங்க வீட்டில வந்து பொண்ணு கேப்பானாம்எவ்ளோ தைரியம் பாறேன்.. முன்ன, பின்ன ஒன்னும் தெரியாத ஒரு ஆளைப்போய் நானே எங்க வீட்டுல  என்னை கட்டிக்குடுக்கச்சொல்லி ரெக்கமண்ட் பண்ணனுமாம். இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல...”

இதை நீ முன்னாடியே சொல்லியிருக்கணும். 30 நாளா ஒரு மனுசனை உன் பின்னால அலையவிட்டு இப்ப சொல்றயே . உனக்கும் குறும்புதானே.. ”

Sunday, November 10, 2013

தனிமையின் இனிமை!



                                        நன்றி : ஓவியம் - திரு ஆர்,எஸ்.மணி

இயலாது என்று சொல்லும்
இம்சையைக் கொடுக்காதே
இயல்பாய் இருக்கும் இனிமை
இங்கிதமாய் நீளும் தனிமை!

நாளும் ஒரு பாடமடி
நிதமும் ஒரு முகமூடி
நகலும் அசலும் உறவாடி
கருமமேக் கண்ணாயினர்.

ஆர்ப்பரிக்காத அமைதி
உள்ளக் கொந்தளிப்பின்
உச்சம் உலர்ந்த சுவாசம்
உயிரில் கலந்த உன்னதம்!

அமைதியான நதியின் ஓடம்
அளவில்லாத கருணை ஈரம்
பிழையில்லாத வான் மேகம்
பிரிவறியாத புள்ளின் நேசம்!


Saturday, November 2, 2013

அருளுடை அன்னை சாரதா தேவியார்


பவள சங்கரி



கற்காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம்வரையிலும் இந்திய மண்ணில் அவதரிக்கும் பெரும்பாலான பெண்களின் நடை, உடை, பாவனைகளின் அடிப்படையில், ஆன்மிக உணர்வு நிறைந்திருப்பது வெள்ளிடைமலை. இந்த ஆன்மீக எண்ணங்களுக்கு அடிகோலுகிற, தூய்மை, பொறுமை, பக்தி, ஒழுக்கநெறி, தன்னலமற்ற அன்பு ஆகிய குண நலன்கள் பிறவியிலேயே வாய்க்கப் பெறுகிறார்கள் பெண்கள். உண்மையிலேயே நம் இந்திய வரலாற்றின் முக்கியமான பக்கங்களை நிரப்புவது இதுபோன்ற ஆத்மாக்களின் சரிதங்களையே. குறைபாடுகளைக் களைந்து தனி மனித ஒழுக்க நெறியை பின்பற்றி, அகத்தூய்மை பெறுவதே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தோர், வாழ்வோர் எண்ணற்றவர். நாகரீகம் வளர, வளர நம் இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஓரளவு மாற்றங்கள் வந்திருப்பினும், அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்பதே சத்தியம். சாதாரண மானிடராய் இருப்பவருக்கே இந்நிலை எனும்போது, ஒரு மகானாக அவதரித்த, தெய்வப் பிறவியான அவருக்கு வாழ்க்கைப்படும் ஒரு பெண்மணி எப்படியிருப்பார் என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

Friday, November 1, 2013

கருந்தெய்வம் காளி கோவிலின் வரலாறு - ராணி ராசுமணியின் வரலாறு!



பவள சங்கரி



நம் இந்திய வரலாற்றில் பெண்களின் சாதனைப் பட்டியலை எடுத்துக்கொண்டால் அவை பெரும்பாலும் தன்னலமற்ற சேவைகளின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. மெழுகுவர்த்தியாக தம்மைத்தாமே ஆகுதியாக,  மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கருதி தொண்டாற்றும் எத்தனையோ தெய்வப் பிறவிகளை நம் வரலாறு சந்தித்துக்கொண்டுதானிருக்கிறது. குடத்திலிட்ட விளக்காக எத்தனையோ சேவைகள் வெளியில் தன்னை வெளிச்சம் போட்டு காட்டிக் கொள்ளாவிட்டாலும், அதன் பலாபலன்கள் மூலமாக பிரகாசிக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட அவதாரங்களின் கீர்த்தி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வானும், மண்ணும் இருக்கும்வரை நிலைத்து நிற்கத்தான் செய்கிறது. அந்த வகையில், பல்வேறு விதமான சமூகக் கட்டுப்பாட்டுத் தளையில் சிக்கிக்கொண்டிருந்த காலகட்டங்களிலும் தன்னலமற்ற தன்னுடைய அரிய சேவையால் தம் பிறவிப்பயனை அடைந்த  ஒரு பெண்மணி, ராணி ராசுமணி.  ஸ்ரீராமகிருஷ்ணரின் மண்ணில் தோன்றிய மற்றொரு மாணிக்கம் இவர்.