Thursday, November 11, 2021

ஆன்மா அழிவதில்லை!


 

நிலைமாறும் உலகில் நிலையில்லா வாழ்க்கையிது என்று தெரிந்தும் நம்மை நம்மால் நம் இயல்புகளிலிருந்து பல நேரங்களில் அது மோசமானது என்று அறிந்தும் மாற்றிக்கொள்ள முடியாமலே போய்விடுகிறது. ஆன்மாவிற்கும் ஆன்மிகத்திற்கும் என்ன சம்பந்தம்?

 

ஆன்மீகம் என்பது கட்டுப்பாடுள்ள அறிவியல்தானேயொழிய அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கை அல்ல. ஆன்மீக ஞானிகளின் சித்தாந்தங்கள், வேதங்கள் என அனைத்தும் பெரும்பாலும் அறிவியலின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் சார்ந்த ஆன்மீகம் மட்டுமே நமக்கு அமைதியையும், வெற்றியையும் அருளக்கூடியவை என்பதை உணர்ந்தால் மட்டுமே ஆன்மீகம் என்பதன் முழு பலனையும் அனுபவிக்க முடியும். நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தின் இயக்கங்களையும், அதன் தொடர்புடைய ம் வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள வேண்டியே நாம் ஆரம்ப காலம் முதலே ஆழ்ந்த தேடல் கொண்டிருக்கிறோம். இந்தத் தேடல்களின் ஒரு பகுதியே அறிவியலாகவும், மற்றொரு பகுதி ஆன்மீகமாகவும் உருவெடுத்துள்ளன. ஒரு வகையில் ஆன்மீகமும், அறிவியலும் நெருங்கிய தொடர்புடையவைதான். அறிவியலைப் பொருத்தவரை தமது வாழ்க்கைத் தேவைகளுக்கேற்றவாறு தன்னைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்தை வளைக்க முற்படுகிறது. ஆன்மீகத்தைப் பொருத்தவரை தாம் வாழும் உலகிற்கேற்றவாறு தம்மை அனுசரித்துக்கொள்ளும் போக்கு. மனிதர் அறிவியல் சார்ந்த ஆன்மீகம் கடைபிடிப்பதே சிறந்த வாழ்வியல் நெறி. உதாரணமாக இயற்கைப் பேரழிவுகளின் சேதாரங்களை ஆன்மீக நம்பிக்கையுடன் அறிவியல்பூர்வமாக அணுகி தீர்வு காண்பது போன்றது. அதாவது ஆன்மீகம் என்பது வழிபாடுகளில் மட்டும் அடங்கிவிடுவதில் அல்ல, அதையும் மீறி சிறந்த முறையில் வாழ்ந்து காட்டுவதில் உள்ளது.

 

இறந்தவர்களின் ஆன்மா அழிவதில்லை. பிரபஞ்சத்திற்கு மீண்டும் வருகின்றது, என்ற ஆச்சரியமான தகவலை அமெரிக்க இயற்பியலாளர்கள் இருவர் கண்டுபிடித்து கூறியிருக்கிறார்கள். இதைத்தானே நம் இந்து மதமும், சித்தர்களும் தொன்றுதொட்டு சொல்லி வருகிறார்கள்.

மனித மூளை ஒரு "உயிரியல் கணினி" போலவே செயல்படுவது போல, மனித உணர்வு மூளையில் ஒரு குவியக்கொள்கை கணினி மூலம் இயங்கும் திட்டமாக இருக்கலாம் என்கிறார்கள். நுண்ணிய குழாய்களில் மூளை செல்களால் ஆன்மா பராமரிக்கப்படுகிறதாம். "மருத்துவ ரீதியாக இறந்தவர்கள்" என கருதப்படும்போது மூளையில் உள்ள நுண்ணுயிரிகள் தங்கள் குவாண்டம் நிலைமையை இழந்துவிடுகின்றன, ஆனாலும் பதிவான தகவல்கள் அழிவதில்லை. அவை அப்படியே பிரபஞ்சத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டு சிதைகிறது.

உயிர் போனவுடன் இதயம் அழுகிப்போகும், இரத்த ஓட்டம் நிறுத்தப்படும் என்று சொல்லலாம்; நோயாளி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால், புத்துயிர் பெற்றால், நுண்ணுயிரிகளில் இந்த குவாண்டம் தகவல் மீண்டும் செல்லும்போது ' மரணத்தை அருகில் பார்த்த அனுபவம் உண்டு' என்று கூறுவார். நோயாளி இறந்துவிட்டால், இந்த குவாண்டம் தகவல் உடலின் வெளியே, காலவரையின்றி, ஒரு ஆத்மாவாக உலவ முடியும்.

இந்த "ஆன்மாக்கள்" காலச்சக்கரத்தின் ஆரம்பம் முதலே இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. சமீபத்திய கண்டுபிடிப்புகள் மனிதர்களால் பார்க்க முடியாத அல்லது கையாள முடியாத இருண்ட எரிசக்தியும் இருண்ட பொருட்கள் இருக்கின்றன. இந்த கோட்பாடு மேலும் மர்மமான, கவர்ச்சிகரமான பல விசயங்களுக்கு விடையளிக்கும் என்று நம்புவோம்.. எது எப்படியோ மக்கள் பாவ புண்ணியத்திற்கு கொஞ்சம் அஞ்ச வேண்டிய நிலை உள்ளது என்பது சத்தியம்!

 


No comments:

Post a Comment