Thursday, November 11, 2021

கருவறை மகத்துவம்!

 

 

 

சங்க காலத்தில் கருவறையை நம்
முன்னோர்கள் திருவுண்ணாழிகை
என்றழைத்தனர்

2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் பெருங்கோவில்மாடக்கோவில்கரக்கோவில்,
ஞாழற் கோவில்கொகுடிக் கோவில், இளங்கோவில்மணிக்கோவில்ஆலக்கோவில்
என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.

கோவில்களின் கருவறைகள் போகிற போக்கில் அமைக்கப்பட்டதல்ல. முதலில் கருவறை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதிலேயே பல்வேறு நுட்பங்களை கையாண்டுள்ளனர்.  சதுரம், வட்டம், முக்கோணம் ஆகியவற்றில் ஏதோ ஒரு வடிவில், பஞ்ச பூதங்களின் சக்தி, வானியல் கதிர்வீச்சு போன்றவையெல்லாம் மிகுந்திருக்கும் இடமாகத் தேர்ந்தெடுத்து நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு  உருவாக்கியுள்ள நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை ஒருசேரக் கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்துள்ளனர். அங்ஙனம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் முதலில் தானியங்களை விதைக்கிறார்கள். அவை மூன்று நாட்களுக்குள் முளைத்துவிட்டால் அது உத்தமம் என்றும், அந்த உத்தமம் இடத்தில் மட்டுமே கருவறை கட்டப்படும்.  தமிழ்நட்டில் முக்கோண அமைப்பில் கோவில்கள் இல்லை.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் கருவறை இதயம் போன்ற வடிவுடையது. மதுரை அழகர்கோவிலில் உள்ள
ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது
ஆச்சரியமானது

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீசுவரர் ஆலயத்தின் கருவறை சந்திரகாந்த கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் என்ன விசேசம் என்றால், இங்கு கோடை காலத்தில் குளிச்சியாகவும், குளிர் காலத்தில் வெப்பமாகவும் இருக்கும்.

மூலவர் எழுந்தருளியுள்ள கருவறை இரண்டு விதமாக அமைக்கப்படும். எட்டு எட்டாக அறுபத்து நான்கு சதுரங்கள் அல்லது ஒன்பது ஒன்பதாக 81 சதுரங்களில் கருவறை அமைக்கப்படும். கருவறையின் கூரையில் யாளி உட்பட பூதங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். தேவ கோட்டம் எனப்படும் இதன் வாயிலில் தட்சன், துர்க்கை, நரசிம்மன் போன்ற தெய்வங்கள் இடம்பெற்றிருக்கும்.

இப்படி ஒவ்வொரு ஆலயத்திலும் ஏதோவொரு சூட்சுமம் வைத்து கருவறையை அமைத்துள்ள நம் முன்னோர்கள் எண்ணெய் விளக்குகளால் மட்டுமே அங்கு வெளிச்சம் இருக்கும்படி அதை சற்று இருட்டாகவே வைத்தனர். இதில் ஒரு அறிவியல் பின்னணியும் உள்ளது. கருவறையின் மேல் உள்ள விமானத்தில் உள்ள கலசத்தின் மூலமாக சூரியக் கதிர்களின் அலை மூலவருக்கு கடத்தப்படுகிறது. கருவறைக்குள் இருக்கக்கூடிய ஆற்றல் இடமிருந்து வலமாக சுற்றுவதாக இப்போதைய ஆரய்ச்சியாளர்கள் கணித்துச் சொல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடவுளை இடமிருந்து வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். சிலைக்கு
அடியில் உள்ள யந்திரம் பூமிக்கு அடியில்
இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர்
சிலைக்கு கடத்தும்இதனால் கருவறையில்
இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு
நிரம்பியிருக்கும்.

 

கருவறைக்குள் வைரம்வைடூரியம்தகடுகள்,
கருங்கற்கள்சுட்ட கற்கள்ஆற்று மணல்
போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும்
இருந்தது.
சுண்ணாம்புகடுக்காய்தானிக்காய்,
நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து
பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக
கிரக லட்சணம் என்றனர்பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு
வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும்.
இந்த அலைகள் கோவில் கருவறை விமானம்
மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள்
இருக்கும் மூலவர் மீது பாயும்பிறகு
அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க
விரவிபரவும்எனவேதான் ஆலயங்களுக்கு
செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.
இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை
அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை
கடைபிடித்தனர்எல்லா ஆலயங்களிலும்
கருவறையானதுவாசல் தவிர மற்ற
அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக
இருக்கும்.

பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம்
முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம
முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும்.
எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல்
ஆராதனையின் போது வழிபட்டால் அதிக
நன்மை பெறலாம்இந்த காந்த அலைகள்தான்
கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள்,
கொடி மரம்பலி பீடம் போன்றவற்றை
கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல
இணைக்கின்றனஎனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’
பெற கருவறை வழிபாடு மிகமிக
முக்கியமானது.

 

சிலைக்கு அடியில் வைக்கப்படும் யந்திரம் பூமிக்கடியிலிருந்து ஆற்றல்களை கடத்துகிறது. இப்படி கருவறையினுள் நிரம்பியிருக்ககூடிய பாசிட்டிவ் எனர்ஜியை வெளியே கடத்த வேண்டும் என்றால் ஆற்றல்கள் நிரம்பியிருக்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும். Image Courtesy அணையா விளக்கு : எல்லா கோவில் கருவரையிலும் அணையா விளக்கு ஒன்று எரிந்து கொண்டேயிருக்கும். இவை அறையில் நிரம்பியிருக்கும் ஆற்றலை வெளியே உந்தித்தள்ள வைத்திடும். இதே போல கருவறைக்குள் இருக்கக்கூடிய ஆற்றல் இடமிருந்து வலமாக சுற்றுவதாக இப்போதைய ஆரய்ச்சியாளர்கள் கணித்துச் சொல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடவுளை இடமிருந்து வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதே ஆன்மீக ரீதியாக, நம் மனதில் ஏற்படுகிற அறியாமை என்னும் இருட்டை நீக்கி அருள் வேண்டியே இருட்டாக அமைக்கப்பெற்றதாகவும் சொல்லபடுவதுண்டு. Image Courtesy கருங்கல் : பெரும்பாலான கோவில்களின் மூலவர் சிலைகள் கருங்கல்லில் தான் செதுக்கப்பட்டிருக்கும். இதற்கு காரணம், பிற உலோகங்களை விட கருங்கல்லில் பல மடங்கு ஆற்றல் இருக்கும். அதை விட கல்லுக்கு எந்த ஆற்றலையும் தன் வசம் ஈர்த்துக் கொள்ளக்கூடியது. அதே போல கருங்கல்லில் பஞ்ச பூத ஆற்றல்களும் அடங்கியிருக்கிறது. இந்த திறன் வேறு எந்த உலோகத்திலும் இல்லை. Image Courtesy பஞ்ச பூதங்கள் : கருங்கற்கள் எப்போதும் குளிர்ந்த நிலையில் இருக்கும். பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தை குறிக்கும் வகையில் இதில் நிலத்தில் வளரக்கூடிய செடிகள் வளர்கின்றன. இதில் நெருப்பின் அம்சமும் உள்ளது. ஆதி மனிதன் இரண்டு கற்களை தட்டியே நெருப்பை கண்டுபிடித்தான். கல்லில் தேரை உயிர்வாழ்வதன் மூலம் அதில் காற்று உண்டு என்பது நிரூபணமாகிறது. இந்த கருங்கல்லுக்கு ஆகயத்தைப் போல வெளியிலிருந்து கிடைக்கிற சப்தங்களை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் திறன் கொண்டுள்ளது. Image Courtesy ஆற்றல் : இத்தகைய பஞ்ச பூதங்கள் ஆற்றல் நிரம்பிய கருங்கல்லிற்கு தினமும் முறைப்படி அபிஷேகம்,அர்ச்சனைகள்,பூஜைகள் செய்யப்படுவதால் சிலையின் பஞ்ச பூத தன்மை அதிகரிக்கிறது. அதோடு கருவறையில் இருக்கக்கூடிய ஆற்றலும் இணைந்து பாசிட்டிவ் வைப்ரேஷனை கொடுக்கிறது.


No comments:

Post a Comment